பாயில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்

பாயில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்

வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கை முறையில் பல விதமான நவீன படுக்கைகள் வந்துவிட்டன. அதோடு சேர்ந்து பல்வேறு நோய்களும் வந்துவிட்டன. பாய் போட்டு உறங்கும் வழக்கத்தை பலரும் மறந்துவிட்டனர். கட்டில் நவீன மெத்தையில் படுத்து உறங்குவதையே பலரும் விரும்புகின்றனர்.

“பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்” என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப தாவரங்களில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்து உறங்குவது நமக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் பலவித மருத்துவ குணங்களையும் கொடுக்கிறது.

பாயில் படுத்து உறங்குவதால் உடல் சூட்டை சம அளவில் வைத்துக் கொள்ள முடியும். மேலும் விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.

கோரை பாய் நன்மைகள் மேலும் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் ஓடும் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் வளரும் கோரைப்புற்களால் பாய்கள் அதிகம் நெய்யப்படுகிறது. இப்பாய்கள், 100 முதல் 140 பாவுப் பருத்தியையும், பட்டு இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்றன.

இயற்கை முறைகளில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

பாய்களின் வகைகள்

  • கோரைப் பாய்,
  • ஈச்சம் பாய்,
  • தாழம் பாய்,
  • நாணல் கோரை பாய்,
  • பிரம்பு பாய்,
  • பேரிச்சம் பாய்,
  • மூங்கில் பாய்.

பாய் வகைகள் பாயில் படுத்து உறங்குவதால் உண்டாகும் நன்மைகள்

  1. நம் உடலில் உள்ள எலும்பு, தசைகள் தொடர்பான பிரச்சினைகள் குறைகின்றன. உடலின் ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்கு நல்ல உற்சாகத்தைத் தரக்கூடியது.
  2. பாயில் உறங்குவது கிட்டத்தட்ட யோகாசனம் செய்தது போன்ற நன்மையைத் தரக்கூடியது.
  3. தரையில் பாய் விரித்துப் படுப்பதன் மூலம், நம் உடலில் புவியீர்ப்பு விசையானது சீராகப் பரவுகிறது.
  4. பாய் நமது உடல் சூட்டை உள்வாங்கக்கூடியது.
  5. கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி, முதுகு வலி ஏற்படுவதை தடுக்கலாம்.
  6. பாயில் உறங்கும் பழக்கமுடைய பெண்களுக்கு சுகப் பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு.
  7. பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுளுக்கு பிடிக்காது, குழந்தையின் முதுகெலும்பு சீர்பட்டு குழந்தை வேகமாக வளர உதவிடும்.
  8. கல்வி கற்கும் மாணவ மாணவிகள் பாயில் உறங்கினால் இளம் வயது கூண் முதுகு விழாது.
  9. பெரும்பாலான முதியோர்கள் தரையில் பாய் விரித்து உறங்குவதே அதிகம் விரும்புவார்கள் அதன் காரணம் 60 வயதிற்கு மேல் உடலில் இரத்த ஓட்ட பிரச்சினை இருக்கும். ஆகையால் பாயில் சமமாக கால் கையை நீட்டி மல்லாக்க படுக்கையில் உடல் எங்கும் இரத்தம் சீராக பாய்ந்து கொழுப்பை குறைக்கிறது.
  10. ஞாபக சக்தியைப் பெருக்கி உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தந்து நீண்ட நாள்கள் சீரும், சிறப்புமாக வாழ வழிவகுக்கும்.
  11. இரும்பு மரக் கட்டிலில் “பிளாஸ்டிக் போம்” மெத்தையில் உறங்குவதை விட வெறும் தரையில் இயற்கையாக தயாரிக்கப்படும் பாய்களில் படுத்து உறங்குவது நம் உடலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கேட்டை நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி : புதன் கேட்டை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் கேட்டை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை :- இந்திரன் கேட்டை நட்சத்திரத்தின் பரிகார...
வெற்றி தரும் நட்சத்திர குறியீடு

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் தினசரி வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் வெற்றி அடைய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். சிறிதும் மனம் தளராமால் அதற்கான முயற்ச்சியை செய்து கொண்டு தான்...
பெண் கால் மச்ச பலன்கள்

பெண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கால் மச்ச பலன்கள் சாமுத்திரிக லட்சனப்படி ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்ட இடங்களில் மச்சம் இருந்தால் அவருக்கு என்ன பலன்கள் உண்டாகும் என குறிப்பிடப்பட்டிற்கிறது. அந்த வகையில் இந்த பகுதியில் பெண் பாதம், மூட்டு,...
சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும்...
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு மற்றும் மகரம் உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் இராசி அதிபதி (தனுசு) : குரு உத்திராடம் நட்சத்திரத்தின் 2,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.