எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூற வேண்டும்?
கோயிலில் சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது கோயில் குருக்கள் மந்திரங்கள் கூறி தீபாராதனை காட்டுவதை நாம் அனவைரும் பார்த்திருப்போம். இறைவனிடம் வந்து வேண்டுபவர்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும், தொழில் சிறக்க வேண்டும், தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும், சுமங்கலி பெண்ணாக இருந்தால் தீர்க்க சுமங்கலியாக இருந்திட வேண்டும் என்ற மந்திரங்களை கூறுவது வழக்கம். அதுபோன்று எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூறலாம் என்று அறிந்திடுவோம்.
மந்திரங்கள்
- எந்த ஒரு செயலையும் செய்வதற்கு மன உறுதி அவசியமாகும். மனம் உறுதியுடனும் எதையும் சாதிக்கும் திறனுடனும் இருக்க தினமும் இந்த மந்திரத்தை 108 முறை கூறுவது நல்லது.
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யாகுமரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்
- புத்தி கூர்மையாகி அறிவு பிரகாசமாக இருந்திட தினமும் இந்த மந்திரத்தை 11 முறை கூறுவது நல்லது.
ஓம் பூர்புவ: ஸ்வ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
- நினைத்த காரியம் நிறைவேறிட தினமும் இந்த மந்திரத்தை 21 முறை கூறுவது சிறப்பாகும்.
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹா ப்ராக்ஞ்ய
மம கார்யம் ஸாதயா.
- சகல கலைகளிலும் தேர்ச்சி அடையவும், நினைவாற்றல் அதிகரிக்கவும் தினமும் இந்த மந்திரத்தை 16 முறை படித்து வருவது நல்லது.
ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர் பயத்வம் அரோகதா அஜாட்யம்
வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரனாத் பவேத்
- நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிட தினமும் இந்த மந்திரத்தை 9 முறை கூறுவதால் நன்மை கிடைக்கும்.
ஓம் வருணோ வாயுகதி மான்வாயு
கௌபேர ஈஸ்வர ரவிச்சந்திர குஜஸ்
ஸெளம்யோ குருக் காவ்யோ
சனைச்வர ராகு கேதுர் மருத்தோதா தாதா
ஹர்தா ஸமீரஜா
- எதிரிகளால் ஏற்படும் துன்பம் நீங்கிட தினமும் இந்த மந்திரத்தை 18 முறை கூற வேண்டும்.
ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ
ஜகதீசோ ஜனேஸ்வர ஜாகத்பிதா
ஹரிச்ரீசோ கருடஸ்மய பஞ்ஜன
- கடன் தொல்லை நீங்கி, நிம்மதியாக இருந்திட தினமும் இந்த மந்திரத்தை 31 முறை கூறுவது நல்லது.
ஓம் ருணதர்ய ஹர்ஸ் ஷூக்ஷ்ம
ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந்
அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர்
காதா ஸ்ம்ருதிர் மனு:
- தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற தினமும் இந்த மந்திரத்தை 21 முறை படித்து வர வேண்டும்.
ஓம் காத்யாயனி மஹா மாயே
மஹாயோஹீன் நந்தகோப ஹுதம்
தேவி பதிம் மே குரு தே நம:
- வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது நினைத்த காரியம் வெற்றியடைய இந்த மந்திரத்தை 7 முறை படிப்பது நல்லது.
ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே
ராம பூஜித பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி
ஸித்திர்பவது மேஸதா:
- விஷ பூச்சிகள் கடித்தால் விஷத்தின் பாதிப்புகள் நீங்கிட தினமும் இந்த மந்திரத்தை 13 முறை கூறுவது நல்லது.
ஓம் ஹ்ரீம் பச்சிம முகே
வீர கருடாய பஞ்சமுகி வீர
ஹனுமதே மம் மம் மம் மம்
மம் விஷ ஹரணாய ஸ்வாஹா:
- சகல செல்வங்களும் கிடைத்திட தினமும் இந்த மந்திரத்தை 108 முறை கூறி வர வேண்டும்.
ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
- பகைவர்களின் பயம் நீங்கிட தினமும் இந்த மந்திரத்தை 6 முறை படித்து வர வேண்டும்.
க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி
பிருஹத்கண்டி மஹத்மயி தேவி தேவி
மஹாதேவி மம சத்ரூன் வினாசய