புகைப்படங்களை இந்த திசையில் மட்டும் மாட்டி வைக்காதீர்கள்

புகைப்படங்களை இந்த திசையில் மட்டும் மாட்டி வைக்காதீர்கள்

நம் அனைவரது  வீட்டிலும் கட்டாயம் இடம்பெறும் ஒரு முக்கிய பொருளாக இருப்பது புகைப்படம். புகைப்படம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்ல நினைவுகளை நினைவூட்டக்கூடிய அழகிய பொக்கிஷங்கள் ஆகும்.

இவற்றை முறையாக பராமரிப்பதில் சிலர் அதிக ஆர்வம் கொள்கின்றனர். நாம் எவ்வளவுதான் மன இறுக்கத்தில் இருந்தாலும் பழைய புகைப்படம் ஒன்றை பார்க்கும் போது மனம் அப்படியே முற்றிலுமாக மாறி விடுவதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம்.

புகைப்படம் மாட்ட சிறந்த திசை ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நம்மை ஆட்கொண்டு விடும் சக்தியை இப்புகைப்படங்கள் பெற்றுள்ளது. அத்தகைய புகைப்படங்களை எந்தத் திசையில் மாட்ட கூடாது? என்பதைப் பற்றி காணலாம்.

புகைப்படங்களை எந்த திசையில் மாட்ட வேண்டும் 

வீட்டில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படங்களில் முக்கியமாக இருப்பது திருமண புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படம் . திருமண புகைப்படங்கள் நல்ல அனுபவங்களையும், நம்மை சார்ந்த உறவுகளை அடிக்கடி நினைவூட்ட கூடிய ஒன்றாக இருக்கிறது.

திருமண புகைப்படங்கள் வீட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டிய புகைப்படங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அனைவரது கண்களிலும் தினமும் பார்க்கும் வண்ணம் இப்புகைப்படம் மாட்டி வைப்பது நல்லது.

முந்தைய காலங்களில் எல்லாம் வம்சா வழியாக வரும் அனைவரது புகைப்படங்களும் வரிசையாக, அழகாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும். எந்த வீட்டிற்கு சென்றாலும் இக்காட்சியை நம்மால் காண முடிந்தது. இதன் உளவியல் காரணம் மிகவும் விசித்திரமானவை.

எந்த திசையில் புகைப்படங்களை மாட்ட வேண்டும்
இதுபோன்று வரிசையாக மாற்றி வைக்கும் புகைப்படங்களை தினமும் பார்க்கும்  பொழுது, நம் உடலில் நேர்மறை சக்திகள் ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது.

இச்செயல் நம்முடைய சந்ததிகளை நாம் தெரிந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். நம் முன்னோர்களின் ஆசியும் இதன் மூலம் நமக்கு பரிபூரணமாக கிட்டும். இதேபோல் குடும்பத்தில் இருக்கும் அனைவரது புகைப்படங்களையும், உங்களது மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவூட்டும் வகையில் புகைப்படங்களை அனைவரும் காணும் வண்ணம் எந்த திசையில் வேண்டுமானாலும் நீங்கள் மாட்டி வைக்கலாம்.

ஆனால் இதில் புகைப்படங்கள் மாட்ட கூடாத திசை என்பது தெற்கு திசையாக இருக்கிறது. தெற்கு திசையை நோக்கியபடி உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை கட்டாயம் மாட்டி வைக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம்.

உயிருடன் இருக்கும் நபரின் புகைப்படத்தை தெற்கு நோக்கியபடி மாட்டி வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அமையும். இறந்தவர்களின் புகைப்படங்களை தான் தெற்கு திசையில் மாட்டி வைக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

இந்த காரணத்தினால் தான் அத்திசையில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை மாட்டி வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக திருமண புகைப்படங்களை எந்த காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி மாட்டி வைக்காதீர்கள். முற்றிலுமாக தெற்கு திசையை தவிர்ப்பது உத்தமம். என்கிறது சாஸ்திரம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மூலம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு மூலம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது மூலம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு மூலம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : சிவன் மூலம் நட்சத்திரத்தின் பரிகார...
சருமத்தில் எண்ணெய் பசை குறைய

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

எண்ணெய் பசை சருமம்  நம் அனைவருக்குமே சருமம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும்....

30 வயதை கடந்த பெண்களா நீங்கள் ?  அப்போ இந்த பதிவை கண்டிப்பா பாருங்க.

பெண்களின் வாழ்க்கை முறை   பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது, வீட்டை நிர்வகிப்பது என பல்வேறு பொறுப்புகளை சுமந்து செல்கின்றனர். அதிலும் வேலைக்கு...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...

Riddles with Answers | Puzzles and vidukathaigal

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.