Home Tags சில்லி சிக்கன் எவ்வாறு செய்வது

Tag: சில்லி சிக்கன் எவ்வாறு செய்வது

சில்லி சிக்கன் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி

சில்லி சிக்கன் வீட்டில் செய்வது எப்படி

சில்லி சிக்கன்

அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனை வித விதமாக சாப்பிட அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போதைய நவீன உலகில் வித விதமான சிக்கன் உணவுகள் விரைவாகவும், எளிதாவும் தயார் செய்யபடுகிறது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் சைனீஸ் வகை உணவான சில்லி சிக்கன். இந்த சில்லி சிக்கனை வீட்டிலேயே எவ்வாறு எளிதாக தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

சில்லி சிக்கன் வீட்டில் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழி கறி – 1/2 கிலோ (எலும்பில்லாதது)
2. சோள மாவு – 50 கிராம்
3. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி
4. மிளகாய் தூள் – 2 மேஜைக்கரண்டி
5. அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி
6. முட்டை – 2
7. தயிர் – 1 மேஜைக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு
10. எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
11. வெங்காயம் – 1
12. குடைமிளகாய் – சிறிதளவு
13. தக்காளி சாஸ் – சிறிதளவு
14. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

1. முதலில் கோழிகறியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

2. சோள மாவுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், அரிசி மாவு, முட்டை, தயிர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

3. பிசைந்து வைத்துள்ள மாவு கலவையுடன் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

4. பிறகு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வெந்தவுடன் தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

5. மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

6. பின்பு அதனுடன் குடை மிளகாயை போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

7. இதனுடன் பொரித்து வைத்த கோழிகறியை போட்டு இரண்டு நிமிடம் நன்றாக கிளறி கொள்ளவும்.

8. பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மசாலாக்கள், உப்பு, தக்காளி சாஸ் போட்டு கிளறி கொள்ளவும்.

9. பின்பு இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் சுண்டும் வரை நன்றாக கிளறி கொள்ளவும்.

10. பின்பு இதனுடன் கறிவேப்பிலை தூவி பரிமாறினால் சுவையான சில்லி சிக்கன் தயார்.

அதனுடன் வெங்காயம், மிளகு தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுவையான சில்லி சிக்கன் தயார்.