Home Tags பர்வத யோகம்

Tag: பர்வத யோகம்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #8

ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதக யோகங்கள்

இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்னென்ன மாதிரியான யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஏற்படும் என்பதை நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.

ஜாதகத்தில் யோகங்கள்

யோகங்கள் அத பலன்களுக்கு ஏற்ப ஒருவனை உயர்ந்த நிலையிலும் வைக்கும், ஒருவரை அதல பாதாளத்திலும் தள்ளும். இது அவரவர் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையை பொருத்து மாறுபடும். ஒரு சிலருக்கு அந்த யோகங்கள் பிறந்த உடனேயும், சிலருக்கு மத்திய வயதிலும் அதன் பலன்களை வழங்கும். அதன்படி பல்வேறு யோகங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பல பகுதிகளாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சில யோகங்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.

ஸ்ரீநாத யோகம் :

லக்னத்திற்கு 4,7,10ம் இடங்களில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து அமைந்திருந்தால் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது.

ஸ்ரீநாத யோகத்தின் பலன்கள் :

இந்த யோகம் உள்ளவர்கள் செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். மேலும் சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.

கனக யோகம் :

லக்னம் சரமாக அமையப் பெற்று 5,10 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் 4,7,10 ல் அமைந்திருந்தால் கனக யோகம் உண்டாகிறது.

கனக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இந்த யோகம் உடையவர் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெறுகிறார்கள். நினைத்தவை யாவையும் அடையும் வல்லமை உடையவர்கள்.

ரவி யோகம் :

சூரியனுக்கு இரண்டு பக்கமும் சுப கிரகங்கள் அமைய பெற்றிருக்கும் யோகம் ரவி யோகம் ஆகும்.

ரவி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இந்த யோகம் உடையவர்கள் புகழ், பெருமை, நல்ல பதவி அமையப் பெறுகிறார்கள். சாதனைகள் படைக்கிறார்கள். உயர் பதவி அடையக் கூடியவர்கள்.

யோகங்கள் 27

சரஸ்வதி யோகம் :

குரு, சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் லக்னத்திற்கு கேந்திரத்தில் அதாவது நான்கு, ஏழு மற்றும் பத்திலோ அல்லது திரிகோணத்திலோ (1,5,9) இருப்பின் சரஸ்வதி யோகம் உண்டாகிறது.

சரஸ்வதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

பிறரால் மதிக்கப்படுவார்கள். உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள். எழுத்தாளராகவும், பேச்சாளர்களாகவும் விளங்கக்கூடியவர்கள். கூர்மையான அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல் முதலியன உண்டாகும். அமைச்சர்கள் போன்று உயர்ந்த பதவிகளை அடைவார்.

சங்க யோகம் :

ஐந்து மற்றும் ஆறாம் அதிபதிகள் இணைந்து ஒரே வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கொருவர் 7ம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது.

சங்க யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

உயர் கல்வி கற்ககூடியவர்கள். நீண்ட ஆயுள் உடையவர்கள். நிலையான புகழ் கொண்டவர்கள். சாதனைகள் புரிவதில் வல்லவர்கள்.

ராஜ யோகம் :

9ம் அதிபதி குரு பார்வை பெற்று ஆட்சி பெற்றால் ராஜ யோகம் உண்டாகிறது.

ராஜ யோகத்தின் பலன்கள் :

வீடு, வாகனம், செல்வம், செல்வாக்கு, யாவும் குறைவில்லாமல் அமைகிறது. சகல சௌபாக்கியத்துடன் வாழக்கூடியவர்கள்.

வசுமதி யோகம் :

லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 3, 6, 1௦, 11 ல் சுப கிரகங்கள் இருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது.

வசுமதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

பொருட்செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள். உயர்ந்த அந்தஸ்து, பெருமை, புகழ் போன்ற நற்பலன்கள் உண்டாகும். சகல செல்வங்களும் பெற்று வசதியுடன் வாழ்வார்.

பூமி பாக்கிய யோகம் :

நான்கு மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் மறைவு ஸ்தானங்களில் அமராமலும், நீச்சம் பெறாமலும் மற்றும் பாவ கிரகங்கள் சேர்க்கை இல்லாமலும் இருந்தால் பூமி பாக்கிய யோகம் உண்டாகிறது.

பூமி பாக்கிய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

மனை சேர்க்கை உண்டாகும். செல்வங்கள் நிலைத்து நிற்கும்.

யோகங்கள் என்றால் என்ன

லட்சுமி யோகம் :

9ம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று இருந்தால் லட்சுமி யோகம் உண்டாகிறது.

லட்சுமி யோகத்தின் பலன்கள் :

லட்சுமி கடாட்சம் பெற்று வாழ்வார்கள். எதிர்பாராத செல்வ செழிப்பு உண்டாகும்.

பாபகத்ரி யோகம் :

லக்னம் அல்லது சந்திரன் இரு அசுப கிரகங்களுக்கு இடையில் அமர்ந்திருக்க உண்டாவது பாபகத்ரி யோகம் உண்டாகிறது.

பாபகத்ரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

செல்வந்தராயினும் வாழ்வில் சொல்ல முடியாத துன்பங்களை சந்திப்பார்கள்.

தரித்திர யோகம் :

9ம் அதிபதி 12ம் வீட்டில் மறைவு பெற்றால் தரித்திர யோகம் உண்டாகிறது.

தரித்திர யோகத்தின் பலன்கள் :

இவர்கள் பிறருக்கு உதவியே செய்தாலும் அவச்பெயர்தான் உண்டாகும். நிலையான செல்வம் இருக்காது மற்றும் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும்.

அந்திய வயது யோகம் :

லக்னாதிபதி மற்றும் 2ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருந்தாலும், லக்னத்தில் அமர்ந்து இருந்தாலும் அந்திய வயது யோகம் உண்டாகிறது.

அந்திய வயது யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இவர்கள் இளமையில் துன்பம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள். மத்திய வயதில் உயர் பதவி பெற்று பெருமையுடனும், கீர்த்தியுடனும் வாழ்வார்கள்.

திரிலோசனா யோகம் :

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோண வீடுகளில் அமைந்து இருந்தால் திரிலோசனா யோகம் உண்டாகிறது.

திரிலோசனா யோகத்தின் பலன்கள் :

எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது.

பர்வத யோகம் :

லக்னாதிபதி நிற்கும் வீட்டின் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெறுவது அல்லது லக்னத்திற்கு கேந்திர அதிபதிகள் 4,7,10 இடங்களில் பலம் பெற்றாலும் அமைவது பர்வத யோகம் ஆகும்.

பர்வத யோகத்தின் பலன்கள் :

புகழ் பெருமை உலகம் போற்றும் உன்னதமான நிலை உண்டாகிறது.

அரச யோகம் :

சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அந்த சந்திரனை சுக்கிரன் மற்றும் குரு பார்வை பெற்றால் அரச யோகம் உண்டாகும்.

அரச யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

நாட்டை ஆளக் கூடிய யோகம் உண்டாகும்.

உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.