Home Tags முடக்கத்தான் கீரையின் பயன்கள்

Tag: முடக்கத்தான் கீரையின் பயன்கள்

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் மருத்துவ பயன்கள்

முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிறத்தில் இருக்கும். முடக்கத்தான் கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டது தான்.

முடக்கத்தான் மருத்துவ பயன்கள்

உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் இதற்கு முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் காரணம் ஏற்பட்டது. முடக்கறுத்தான் பேச்சு வழக்கில் முடக்கத்தான் ஆனது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை என அழைக்கபடுகிறது. இது உடலில் ஏற்படும் வாய்வு பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் அருமருந்தாகும்.

முடக்கத்தான் கீரையானது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகின்றது. தோட்டங்கள், வீட்டு வேலி, பெரிய மரங்கள், செடிகள், புதர்கள் மேல் படர்ந்து வளரும். முடக்கத்தான் கொடியின் தண்டும் இலைக் காம்பும் மெலிதாக இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு வளர்ந்து படரும்.

முடக்கத்தான் காய்

முடக்கத்தான் காயானது மூன்று பிரிவாகப் பிரிந்து மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். காய் முற்றிய பின் பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்து விடும். இதை மற்ற கீரை வகைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். இதை தனியாக மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

மூட்டு வலியை அகற்றும் முடக்கத்தான்

முடக்கத்தான் கீரையானது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் வீட்டருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை ஆகும். நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று மருத்துவரிடம் செல்வதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட எந்த நோயும் நம்மை அணுகாது.

முடக்கத்தான் வேறு பெயர்கள்

இதற்கு முடர்குற்றான், முடக்கறுத்தான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர் என அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டதாகும்.

முடக்கத்தான் கீரையில் அடங்கியுள்ள சத்துக்கள்

முடக்கத்தான் கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, தாது சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சரியான அளவில் அடங்கியுள்ளது.

முடக்கத்தான் மருத்துவப் பயன்கள்

வாய்வு பிரச்சனை பறந்தோடும்

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இலையை ரசம் போல வைத்துச் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள தேவையற்ற வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலச் சிக்கல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

மலச்சிக்கல் குணமாகும்

சிறிது முடக்கற்றான் இலைகள், வெள்ளைப் பூண்டு ஐந்து, அரைத் தேக்கரண்டி அளவு மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். இதனால் வயிறு சுத்தமாகும், வயிற்று பூசிகள் அழியும், மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் தீரும். அதிகமாக பேதியினால் ஒரு எலுமிச்சை பழச்சாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும்.

காது வலி, சீழ் வடிதல் நிற்கும்

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் காய்ச்சி, மூட்டு பகுதிகளில் வலியுள்ள இடங்களில் பூசினால் மூட்டு வலி உடனே நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்து எடுத்து, எடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காதில் இருந்து சீழ் வடிவது போன்றவை குணமாகும்.

முடக்கத்தான் நன்மைகள்

சுகபிரசவம் உண்டாகும்

முடக்கற்றான் இலையைத் மை போல் அரைத்து, சுக பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். மருத்துவமனை அருகில் இல்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், மருத்துவச்சிகளும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர்.

நாள்பட்ட இருமல் குணமாகும்

முடக்கற்றான் இலை மற்றும் வேர் இரண்டையும் குடிநீரில் இட்டு மூன்று வேளை அறுபது மில்லி வீதம் தொடர்ந்து சில நாட்கள் குடித்து வர நாள்பட்ட இருமல் சரியாகும்.

மாதவிலக்கு பிரச்சனை தீரும்

பெண்கள் மிகவும் அசௌகரியாமாக உணரும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமானது மாதவிடாய் பிரச்சனை. ஒரு பெண்களுக்கு மாதந்தோறும் சரியாக மாதவிலக்கு ஏற்படாது மற்றும் அடிவயிற்றில் மிகுந்த வலி உண்டாகும். அப்படியானவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பிரச்சனை சரியாகும் மற்றும் அடிவயிற்று வலி குறையும்.

மலமிளக்கியாக செயல்படும்

முடக்கற்றான் கொடி மலமிளக்கி செயல்படும் தன்மையுடையது. முடக்கத்தான் கொடியை குடிநீரில் இட்டு அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து குடித்து வர கெட்டியாக உள்ள மலம் இளகி மலத்தைக் கழிக்கச் செய்யும்.