முதலில் சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சிக்கன் கிரேவி செய்ய ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்க்கு ஒரு மிக்ஸி ஜாரில் ½ கப் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம்,மிளகு, கசகசா, முந்திரி சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சிறிதளவு சோம்பு போட்டு தாளிக்கவும்.