விஜயதசமி வழிபாடு
அகில உலகத்தையும் காக்கக்கூடிய அம்பிகையானவள் சக்தி, லக்ஷ்மி, சரஸ்வதி என மூன்று தேவிகளின் சொருபமாக அவதரித்து மகிஷாசுரன் என்ற அரக்கனிடம் 9 நாட்கள் போர் புரிந்து பின் 10 வது நாளில் தான் வெற்றி அடைந்தார். அம்பிகை வெற்றி வாகை சூடிய அந்த நாளைதான் நாம் விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.
விஜயதசமி அன்று வழிபாடு செய்ய சிறந்த நேரம் ( காலை 10.30 முதல் மதியம் 1 மணி ), ( மாலை 4.30 முதல் 6 மணி வரை) நீங்கள் முதன் முதலில் செய்யக்கூடிய நல்ல விஷயங்களை துவங்க சிறந்த நேரமாகும்.
விஜயதசமி, விஜய் என்றால் வெற்றி, தசமி என்றால் பத்து என்பதே அதன் பொருளாகும். அப்பபடிபட்ட சக்தி வாய்ந்த நான்னாளாகிய விஜயதசமி அன்று துவங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியை கொடுக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக குழந்தைகளை விஜயதசமி நாளில் தான் முதன் முதலில் பள்ளியில் சேர்த்து விடுவார்கள். அவர்களின் கல்வி ஆற்றல் சிறந்து விளங்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.
நவராத்திரியின் 9 ஆம் நாளன்று சரஸ்வதி தேவியை வழிபட்டு அந்த நாளையே நாம் சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்று கொண்டாடுகிறோம். நம் வாழ்வாதாரத்திர்க்காக நாம் செய்யும் செயல்கள், வித்தைகள்,தொழில்கள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி தேவி ஆவார்.
ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி , அழகுபடுத்தி, மஞ்சள் , குங்குமம் வைத்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். நெய்வேத்தியமாக அவல், பொரி, பழங்கள் போன்றவற்றை படைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் சரஸ்வதி தேவியின் அருளை பரிபூரணமாக பெற முடியும். வழிபாடு செய்த பின் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுத்து உபயோகப்படுத்த வேண்டும்.
விஜயதசமி அன்று செய்ய வேண்டியவை
புதிய வேலையை துவங்குதல்
நாம் பல நாட்களாக ஏதாவது ஒரு கலையை கற்கவோ அல்லது ஒரு புதிய செயலை செய்யவோ திட்டமிட்டிருந்தால், அதை நாம் இந்நாளில் தொடங்கலாம். விஜயதசமி அன்று துவங்கும் வேலை வெற்றிப்பாதையை நோக்கி பயணித்து நமக்கு வெற்றியைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை .
மீன் தரிசனம்
விஜயதசமி அன்று தண்ணீரில் மீன்களைப் பார்ப்பது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. மீன்களை தண்ணீரில் பார்ப்பது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்று கூறுகிறார்கள். இது நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபடுவதற்கான அறிகுறியாகும்.
பறவை தரிசனம்
பனங்காடை என்று சொல்லப்படும் எனப்படும் நீலகண்ட பறவையைப் பார்ப்பது மிகவும் புனிதமான அடையாளமாகக் கருதப்படுகிறது. அப்பறவையைப் பார்ப்பதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மேலும் அவரது வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும்.
சிவன் மற்றும் ராமர் தரிசனம்
சிவன் கோயில் அல்லது ராமர் கோயிலுக்குச் சென்று வணங்குவது இந்த நாளில் புனிதமான ஒரு செயலாகக் கருதப்படுகின்றது. இந்த நாளில் செய்யப்படும் தரிசனத்திற்கு சிறப்பு பலன் கிடைக்கும். பண வரவு, உடல் ஆரோக்கியம், புகழ், புத்தி கூர்மை ஆகியவை வந்து சேரும்.
வெற்றிலை பாக்கு உண்பது
விஜயதசமியன்று பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலையை உட்கொள்வது மிகவும் மங்கலமான விஷயமாகும். இதற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மேலும் இந்த நாளில் ஆஞ்சநேயருக்கு தாம்பூலம் நெய்வேத்தியம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் பல வெற்றிகள் நம்மை வந்தடையும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.