Home உணவே மருந்து பழங்கள் மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிகம் வளர்கிறது. தற்போது இது இந்தியா மற்றும் இலங்கையிலும் விளைவிக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் ‘சீசன்’ ஆகும்.

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் இனிப்பும், இலேசான புளிப்பும், சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் இருக்கும். மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், உள்ளே உள்ள கனி வெள்ளை நிறத்தில் சுவைக்க இனிதாகவும் இருக்கும். மங்குஸ்தான் மரம் 20 அடி முதல் 82 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் பழத்தின் ஓடு போன்ற தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் வெள்ளை நிறம் கொண்ட கனி இருக்கும். இதற்கு ‘சூலம்புளி’ என்ற பெயரும் உண்டு.

இந்தியாவில் கேரளாவிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம், கல்லார் மற்றும் பரளியார், திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகேயுள்ள மருதாநதி பகுதி, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

மங்குஸ்தானில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

மங்குஸ்தானில் கலோரி – 63%, வைட்டமின் சி- 12%, நார்ச்சத்து – 1.3 கி, இரும்பு சத்து – 0.57 மி.கி, கால்சியம் – 16 மி.கி, சோடியம் – 7 மி.கி, பொட்டாசியம் – 48 மி.கி போன்றவை அடங்கியுள்ளன.

மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள்

உடனடி ஆற்றலை வழங்கும்

சுவை மிகுந்த மங்குஸ்தான் பழத்தின் 100 கிராம் சதையில் 63% கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இது உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது.

கெட்ட கொழுப்பு அறவே கிடையாது

மங்குஸ்தான் பழத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச் சத்துப் பொருள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்து கொலஸ்டிரால் அளவை சமப்படுத்துகிறது.

எளிதில் ஜீரணமாகும்

மங்குஸ்தான் பழத்தில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. 100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.

உடல் எடையை குறைக்கும்

உடல் கொழுப்பை அல்லது உடல் இடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

நோய் தோற்று ஏற்படாமல் தடுக்கும்

மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரெடிகல்களை விரட்டும் தன்மையும் ‘வைட்டமின் சி’க்கு உண்டு.

வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது

மங்குஸ்தானில் தயாமின், நியாசின், போலேட் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சியை மாற்றும் பணிகளில் இந்த வைட்டமின்கள் அதிக அளவில் உதவுகின்றன.

மலச்சிக்கலை தீர்க்கும்

மங்குஸ்தான் பழத்தில் நார்ச் சத்து அதிகளவு உள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

இதய வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும்

உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஒரே சீராக கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது மிகவும் அவசியமானது. இது பக்கவாதம் மற்றும் இதயவியாதிகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.

பார்வை பிரகாசமடையும்

கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருக்க வைட்டமின் A, அஸ்கார்பிக் அமிலம், நிகோடினிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியம்.
மங்குஸ்தான் பழத்தில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே, மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருவது கண் பார்வை திறனுக்கு மிகவும் உகந்தது.

மாதவிடாய் பிரச்சனைகளை நீக்கும்

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. பருவ காலங்களில் மங்குஸ்தான் பழங்களை வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது.

மங்குஸ்தான் பழம் சாப்பிடும் முறை:

1. மேற்தோலை நீக்கிவிட்டு வெள்ளை நிறத்திலான மங்குஸ்தான் பழங்களை அப்படியே சாப்பிடலாம். ஒரு சில பழங்களில் சிறு கோட்டைகள் இருக்கும்.

2. கோடை வெப்பம் தணிப்பதிலும், தாகம் மற்றும் நாவறட்சியை தணிக்கவும் மங்குஸ்தான் ஜூஸ் உதவுகிறது.

3. தேங்காய்ப்பால், மக்காச்சோள மாவு மற்றும் மங்குஸ்தான் பழத்துண்டுகள் சேர்த்து செய்யப்படும் ‘மங்குஸ்தான் கிளாபோட்டி’ சாப்பிட்ட பிறகு அருந்தும் பிரபல பானமாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version