Home சமையல் இனிப்புகள் பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா

பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி தேவையானப் பொருட்கள்:

  • பப்பாளி பழ துண்டுகள்  –  2 கப்
  • சர்க்கரை  –  1 கப்
  • சோள மாவு – 2 ஸ்பூன்
  • நெய்  –  4 தேவையான அளவு
  • ஏலக்காய் தூள்  –  சிறிதளவு
  • முந்திரி  –  தேவையான அளவு
  • பாதாம் பருப்பு  –  தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் பப்பாளி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய பப்பாளி பழத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம் நெய் சேர்த்து நெய் சூடானதும் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பப்பாளி பழத்தை சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறி விடவும்.
  • பப்பாளி பழத்தின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கலந்து விடவும்.
  • பின்னர் அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • சர்க்கரை நன்கு கரைந்ததும் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் சோள மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் கரைத்த சோள மாவினை பப்பாளி பழத்துடன் சேர்த்து நன்கு கைவிடாமல் கலந்து விடவும்.
  • நன்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை நன்கு கிளறி விடவும்.
  • கடைசியாக கொஞ்சம் நெய் சேர்த்து வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் பருப்பை சேர்த்து இறக்கினால் சுவையான பப்பாளி பழ அல்வா ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version