Home ஜோதிடம் திருமணம், சடங்குகள் திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன?

திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை கிரககிக்ககூடியது. இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இந்த சடங்கிற்கு பயன்படுத்துகின்றனர்.

தாரை வார்த்த பின் தான் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை பெறுகின்றான். என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கட்டி கொடுக்க சம்மதிக்கிறேன் என மணமகளின் பெற்றோர், தாரை வார்த்து கொடுக்க, மணமகனின் பெற்றோர் இனி உங்கள் மகளை எங்களது மருமகளாக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதியே இந்த தாரை வார்த்தல் சடங்காகும்.

தாரை வார்த்தல் என்றால் என்ன

எனவேதான், மணமகனின் தாயார் இதை கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க, அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை, மணமகனின் கை, மணப்பெண்ணின் கை, மணப்பெண்ணின் தந்தையின் கை, அதற்கு மேல் மணப்பெண்ணின் தாய் கை இருக்கும். இந்த வரிசையில் கைகளை வைத்து இந்த தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் இந்த சடங்கு தாரை வார்த்தல் எனப்படும்.

திருமணத்தில் கும்பம் ஏன் வைக்கிறார்கள்?

திருமணத்தில் கும்பம் வைத்து பார்த்திருப்போம். ஏன் கும்பம் வைக்கிறார்கள்? கும்பமானது இறைவனின் திருமேனியின் அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி, கும்பத்தில் பாவிக்கப்படும் கும்ப வஸ்திரமானது உடம்பின் தோலாகவும், நூலனது நாடி நரம்புகளாகவும், குடமானது தசையாகவும், தண்ணீரானது இரத்தமாகவும், நவரத்தினங்கள் எலும்புகளாகவும், தேங்காயானது தலையாகவும், மாவிலையானது தலைமுடியாகவும், தருப்பையானது குடுமியாகவும், மந்திரமானது உயிராகவும் குறிப்பிடபடுகிறது. இறைவனே கும்ப வடிவில் சாட்சியாக இருந்து இந்த திருமணத்தை நல்ல படியாக நடத்தி தருவார் என்பது நம்பிக்கை.

திருமணத்தில் ஹோமம் ஏன் வளர்க்கிறார்கள்?

நம்முடைய வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி, அக்னி சாட்சியாக திருமணங்கள் நடைபெற வேண்டும். ஹோமம் செய்வதன் மூலம் நவகிரகங்களைத் திருப்திப்படுத்த வேண்டும். ஹோமத்தில் போடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது. ஹோமம் செய்யும் போது எழும் புகையானது உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாக இருக்கும் என்பது நம்பிக்கை.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version