வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்?
வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும், எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்ய வேண்டும்.
சிலர் நம்மிடம் பேசும் போது மிகவும் அழகாக இருக்கும். அவர்களிடம் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் நம்மிடமும் உண்டாவதை நாம் உணர முடியும். சிலர் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டை பராமரிக்கும் அழகு மிக சிறப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலரோ வீட்டை நேர்த்தியாக வைக்காமல் அலங்கோலமாக வைத்திருப்பார்கள். அதிலும் தேவையில்லாத பொருட்களை கழிக்காமல் அதையும் பொக்கிஷம்போல் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

நேர்மறை எண்ணங்கள்
நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால் மனதில் புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்திற்குக்கும். ஒரு சில இடங்களுக்கு நாம் செல்லும்போது நல்ல மனமுள்ள வாசனை மிகுந்த பத்திகள் ,அறைகளுக்கு பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்தியிருப்பதை கவனித்திருப்பீர்கள்.
அத்தகைய வாசனைமிக்க பொருட்கள் இயல்பாகவே நல்ல எண்ணங்களை அதிகரிக்க செய்யும், இத்தகைய வாசனை எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்யும் ஆற்றல் கொண்டது.
வீட்டின் தலைவாசலுக்கு முன்பு தினமும் தண்ணீர் தெளித்து துடைத்து, கோலமிடுவதும், மாலை நேரங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் நேர்மறை சக்திகளை எளிதாக வீட்டுக்குள் வரவழைக்கும். காலையில் எழுந்து குளித்த பின்னர் நறுமணம் தரும் ஊதுபத்திகளை சமையல் அறை மற்றும் ஹால் பகுதிகளில் ஏற்றி வைக்கலாம்.
வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்
வீடு, அலுவலகங்களில் எதிர்மறை ஆற்றல்களை தூண்டி விடக்கூடிய தேவையில்லாத அதாவது வீட்டில் வைத்திருக்கக்கூடாத பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம். வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் அங்கு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், கோபம் போன்றவை அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
ஏன் இவற்றை எல்லாம் நம் வீட்டில் வைத்திருக்க கூடாத என்றால் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி, முகம் பார்க்கமுடியாத வகையில் இரசம் போன கண்ணாடிகள், உடைந்த கண்ணாடி வளையல்கள், விரிசல் விழுந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள் போன்றவைகள் வீட்டில் இருந்தால் எதிர்மறை ஆற்றல் பெருகும். வருமானத்தில் தடையும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும்.
ஓடாத கடிகாரம் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும். அதனால் கடன் பிரச்சனைகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும். துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், துணிகள் போன்றவைகள் இருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும்.
இது போன்ற காரணங்களினால் அவைகளை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவது நல்லது. இவ்வகையான தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வீட்டினை சுத்தமாகவும், அழகாவும், பராமரித்து வைத்திருந்தால் வீட்டில் ஆரோக்கியமும், சகல ஐஸ்வர்யங்களும் என்றும் நிறைந்திருக்கும்.