Home சமையல் இனிப்புகள் உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு – 1 கப்
  • ரவை – ¼ கப்
  • வெல்லம் – 1 கப்
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி – தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு

raagi recipes
செய்முறை

  • கேழ்வரகு  பர்பி செய்வதற்கு ஒருஅடி கனமான வாணலியை சூடுபடுத்திக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • நெய் சூடானதும் அதில் 1 கப் கேழ்வரகு மாவினை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அதில் ¼ கப் ரவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • வேறொரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • வடிகட்டிய வெல்ல கரைசலை கேழ்வரகு மாவுடன் சேர்த்து நன்கு கைவிடாமல் கலந்து விடவும்.
  • கட்டிகள் எதுவும் இல்லாமல் குறைவான தீயில் வைத்து கலந்து விடவும்.
  • வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவும், ரவையும் வெந்துவரும் வரை நன்கு கலந்து விடவும்.
  • மாவு நன்கு வெந்ததும் சிறிதளவு நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கலந்து விடவும்.
  • பின்னர் ஏலக்காய் தூள், முந்திரி சேர்த்து கிளறி ஒரு நெய் தடவிய தட்டில் சேர்க்கவும்.
  • சிறிது சூடு ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறினால் சுவையான சத்தான கேழ்வரகு பர்பி ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version