Home சமையல் இனிப்புகள் கல்யாண வீட்டு சேமியா கேசரி

கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி

தேவையான பொருட்கள்

  • சேமியா – 1 கப்
  • சர்க்கரை – 1/2  கப்
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி – தேவையான அளவு
  • திராட்சை – தேவையான அளவு
  • ஏலக்காய் – சிறிதளவு
  • கேசரி பவுடர் – தேவையான அளவு
  • கண்டென்ஸ் மில்க் – 3 ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

சேமியா கேசரி செய்முறை செய்முறை

  • ஒரு அடி கனமான வாணலியை எடுத்துக் கொண்டு அதில் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • நெய் சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து அதில் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • சேமிய வறுத்த பின் சேமிய மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • தண்ணீர் சேர்த்த பின் கேசரி பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
  • சேமியா வெந்து தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.
  • தண்ணீர் ஓரளவிற்கு சுண்டியவுடன் சர்க்கரை சர்க்கரையை சேர்த்து கலந்து விடவும்.
  • சர்க்கரை சேமியாவுடன் சேர்ந்து நன்கு கலக்கும் வரை கிளறி விடவும்.
  • சர்க்கரை கரைந்தவுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இப்போது 3 ஸ்பூன் அளவிற்கு கண்டென்ஸ் மில்க் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் ஏலக்காய், வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விடவும்.
  • இறக்கும் முன் சிறிதளவு நெய் சேர்த்து கலந்து இறக்கினால் அருமையான சேமியா கேசரி ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version