கைகளை மென்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி?
நம் அனைவருக்குமே நம் முகம் போல கைகளையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவோம். முகம்தான் நம் உடலின் கிரீடம் என்ற நிலையில் முகம் போலவே நம் கைகளும் வெயில், தூசி போன்ற சரும பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறது.
நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கைகள் தான் பெரும்பங்கு வகிக்கின்றன. அலுவலக வேலை, வீட்டு வேலை வரை நாம் செய்யும் பெரும்பாலான வேலைகளை கைகளை பயன்படுத்தி தான் செய்கிறோம்.

நம் கைகளை பராமரிக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
- தினமும் இரவு தூங்குவதற்கு முன், ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்யவும்.
- கற்றாழை சதையை கைகளில் தடவி 15-20 நிமிடங்கள் காயவைத்து, பின்னர் வெந்நீரில் கைகளை கழுவி வர கைகள் மிருதுவாக இருக்கும்.
- வெயில் அல்லது குளிர் காலத்தில் கையுறைகள் அணிந்து கொண்டு வெளியில் செல்வதால் கைகள் பாதுகாப்பாக இருக்கும்.
- எப்போதும் கிச்சனில் ஹேண்ட் லோஷன் வைத்து பாத்திரம் கழுவி முடித்ததும் கைகளை துடைத்து உடனடியாக லோஷனை போட்டு கைகளை சுத்தம் செய்யலாம்.
- வீடு துடைப்பது போன்ற வேலைகளை முடித்தவுடன் இது மாதிரி செய்தால் கைகள் மென்மையாகும்.
- இரவு உறங்கச் செல்லும் முன்பு சிறிது உப்பு எடுத்து இரு கைகளிலும் படுமாறு தேய்த்துக் கழுவிவிட்டு, ஈரம் போக துடைத்து விட்டு லோஷன் தடவி வர கைகள் மென்மையாகும்.
- வாரம் ஒருநாள் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின் கைகளை நன்றாக துடைத்து விட்டு மாய்ஸ்டரைசர் கிரீம் தடவலாம்.
- தினமும் இரவில் குறைந்தது ஐந்து நிமிடங்கள் கைகளை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். தினமும் கைகளுக்கு வேஸ்லின் தடவினால் இரவு முழுவதும் கைகள் மென்மையாக இருக்கும்.
- கைகளை தேங்காய் எண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம். கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து விரல் முடியும்வரை மெதுவாக தேய்த்து மசாஜ் செய்யலாம்.
- விரலுக்கு இடையே உள்ள தசைப் பகுதியில் மெதுவாக மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். மாதம் இருமுறை இப்படி செய்தால் மென்மையாகும்.
- அரை கப் தண்ணீரில் கால் கப் கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தினமும் இரவில் கைகளில் பூசி சில நிமிடங்கள் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் போதும் கைகள் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
- வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் சமஅளவு கிளிசரின் கலந்து கைகளில் தடவி ஊறவைத்து பத்து நிமிடம் கழித்து வெதுப்பான நீரில் கழுவி வந்தால் கைகள் மென்மையாகும்.
- தக்காளி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் கிளிசரின் இந்த மூன்றையும் சம அளவு கலந்து தினமும் இரவில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கைகளில் தடவி பத்து நிமிடங்களுக்கு பின்கழுவி வந்தால் கைகள் மென்மையாகும்.
- ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சில துளிகள் தேன் கலந்து காய்களில் பூசி மிருதுவாக மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவினால் கைகள் மென்மையாக ஆகும்.
- ஒரு டீஸ்பூன் கிளிஸரின், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் 5 சொட்டு பன்னீர் கலந்து தினமும் இரவில் வந்தால் கைகள் மென்மையாகும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய், சிறிது எலுமிச்சை ஜூஸ் எல்லாம் கலந்து கைகளில் பூசி மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊறவைத்து பின் வெது வெதுப்பான நீரில் கைகள் மென்மையாகும்.
தவிர்க்க வேண்டியவை:
- கடுமையான சோப்புகள் மற்றும் இரசாயனப் பொருட்களைக் கைகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- கைகளை நீண்ட நேரம் சோப்பு நீரில் ஊற வைப்பதை தவிர்க்கவும்.