Home ஆரோக்கியம் உடலின் வெப்பத்தை தணிக்க செய்ய வேண்டியவை

உடலின் வெப்பத்தை தணிக்க செய்ய வேண்டியவை

உடலின் வெப்பத்தை தணிக்க செய்ய வேண்டியவை

மனிதர்களுக்கு ஏற்படும்  75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம் தான். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே எடுத்து  தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலைக்கு ஊற்ற வேண்டும்.

உடல் சூடு தனிய

ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இந்த குளியல் முறை நம் முன்னோர்கள் கடைபிடித்த ஒரு வழக்கமாகும். முதலில் குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்..

வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா?

உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

அது   உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது என்பதற்காக. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக.

எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

ஆனால் இன்றைய நவீன குளியல் அறையில் ஹீட்டர் போட்டு சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிக்கும் நமக்கு நோய் வருவதில் ஆச்சர்யம் இல்லை.

தினமும் இந்த முறையில் குளியலை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் வாரம் ஒரு முறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து வர உடல் சூடு வெகுவாக குறைய தொடங்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version