Home ஆரோக்கியம் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்ப காலத்தில், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்க, பெண்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளின்  வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்துக்கள் நிறந்த உணவினை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில், அதிகப்படியாக சாப்பிடுவக்தைத் தவிர்த்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

pregnancy foodகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பால் பொருட்கள்

பால் நாம் அனைவருக்குமே தேவையான ஒரு முக்கியமான உணவுப் பொருளாகும். அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். இதில் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில் முக்கியமாக தயிரை ஏதேனும் வகையில் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். தயிர் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

பருப்பு வகைகள்

அனைத்து வகையான பருப்புகளையும் கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம். அதில் பைபர்கள், புரத சத்துக்கள், இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும். சமீபகாலமாக பெண்களுக்கு ஃபோலேட் சத்து சற்று குறைவாக இருக்கிறது. இது குழந்தை குறைவான எடையில் பிறக்க முக்கிய காரணமாகும். இதனால் பீன்ஸ்,அவரை, சோயாபீன்ஸ், கொண்ட கடலை, பட்டாணி கடலை, வேர்கடலை,உடைத்த கடலை, பாசி பருப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

சால்மோன் மீன்கள்

சால்மோன் மீன்களில் ஓமேகா-3 என்ற ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த சத்து நிச்சயமாக தேவை, ஆனால் இந்த உணவை வாரத்திற்கு 2 முறைக்கு மிகாமல் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஃபேட்டி ஆசிட்டை அதிகமாக எடுத்துக்கொள்வது கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

முட்டைகள்

 பிரசவ காலத்தில் பெண்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று முட்டை. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு 450 மி.கி கோலைன் என்ற சத்து வேண்டும். ஒரு முட்டையில் 110 மி.கி. கோலைன் சத்து இருக்கிறது. அதனால் ஒரு நாளுக்கு 4 முட்டைகள் சாப்பிடலாம்.

கீரைகள் மற்றும் காய்கறிகள்

கர்ப்பிணி பெண்கள் கீரைகள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ப்ரோக்கோலி, கீரைகள், மற்றும் பச்சை நிற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில்  அதிகமான பைபர்கள், விட்டமின் சி, விட்டமின் கே, மற்றும் விட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இதனால் குழந்தை பிறக்கும் போது குறைந்த எடையுடன் பிறக்கும் வாய்ப்பு குறையும்.

பெர்ரி பழங்கள்

பெர்ரி வகை பழங்களில் அதிகமாக விட்டமின் சி, பைபர்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. விட்டமின் சி உங்கள் உடலுக்கு இரும்பு சத்தை பெற உதவும். அதனால் இந்த பழங்களை அதிகம் சாப்பிடுவதால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிக்கும் என்ற பயம் தேவையில்லை.

தானியங்கள்

தானியங்களில் அதிகமான பைபர்கள், விட்டமின்கள் உள்ளன. ஓட்ஸ், திணை போன்ற பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version