மெனோபாஸ் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
மெனோபாஸ் என்றால் என்ன?
மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்வில் மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நிற்கும் ஒரு இயற்கையான காலகட்டமாகும். பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் நிகழும், ஆனால் சிலருக்கு மருத்துவக் காரணங்களால் முன்னதாகவே நிகழவும் வாய்ப்புகள் உள்ளது. மாதவிடாய் ஏற்படாமை, சூடான வியர்வை, மற்றும் யோனி வறட்சி போன்ற அறிகுறிகள் இதில் அடங்கும்
மெனோபாஸ் எப்படி நடக்கிறது?
பெண்ணின் கருப்பைகள் இனப்பெருக்கத்திற்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவதால் பெண்களின் உடலில் மேனோபாஸ் எனும் நிகழ்வு ஏற்படுகிறது. இது அனைத்து பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு இயல்பான நிகழ்வுதான்.

மெனோபாஸ் அறிகுறிகள்

45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த மெனோபாஸ் நிகழ்வு நடைபெறலாம். அவ்வாறு மெனோபாஸ் ஏற்படும் போது மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக நடைபெறாது. உடல் திடீரென சூடாவது போல் தோன்றும், அதிகப்படியான வெப்பம் வெளிப்படும், சரியான தூக்கமின்மை, வியர்த்துக் கொட்டுதல் போன்றவை ஏற்படும்.
பெண்களுக்கு 40 நிமிடம் 55 நிமிடம் மெனோபாஸ் வரலாம். இந்த உடல் மாற்றங்கள் 40 வயதைத் தாண்டிய பிறகு மெதுவாக ஆரம்பிக்க தொடங்குகின்றன. அப்போது இந்த மாதிரி உடல் வெப்பம், வியர்வை இதெல்லாம் ஏற்படுவது சகஜம் தான். இதை Perimenopause என்கிறோம்.
சினைப்பை எனப்படும் ஓவரியில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், அளவில் வேறுபாடுகள் ஏற்படும். அப்போது இந்த அறிகுறிகள் தோன்றும். இவை அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.
பொதுவாக, மெனோபாஸ் மூன்று நிலைகளில் இருக்கும். (perimenopause, menopause, postmenopause ) முதல் நிலையில் உடல்வெப்பம், வியர்வை, ஒழுங்கற்ற பீரியட்ஸ் இருக்கும். அடுத்து முற்றிலுமாக மாதவிடாய் நின்று போய் சினைப்பையில் முட்டை உற்பத்தி நிற்பது. மூன்றாவது நிலை, மாதவிடாய் நின்று சில காலம் ஆனபிறகு வரும் மாற்றங்கள்.
மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எலும்பு தொடர்பான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏன் என்றால் மெனோபாஸ் நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறையத் தொடங்கும். எலும்புகளின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மிகவும் அவசியமாகும். இதனால் பெண்களுக்கு கை, கால், இடுப்பு, மூட்டு வலி போன்றவைகள் ஏற்படும்.
இதனை சரி செய்ய பெண்கள் கால்சியம் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் டி அவசியம் என்பதால், 40 நிமிடங்கள் வெயில் மூலம் கிடைக்கும் இய்றகையான வைட்டமின் டி அல்லது அதற்கான உணவுகள் உங்களுக்குத் தேவை.
மெனோபாஸ் காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் சிலருக்கு உடல் எடை குறையலாம், சிலருக்கு உடல் எடை அதிகரிக்கலாம். அது அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன்களை பொறுத்து மாறுபடும்.
இதனை சிறந்த முறையில் கையாள சரியான நேரத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும், அத்துடன் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்த பலனை தரும்.