Home சமையல் அசைவம் சிக்கன் ரோல் செய்வது எப்படி

சிக்கன் ரோல் செய்வது எப்படி

சிக்கன் ரோல்

சிக்கனை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி சிக்கன் ரோல் சுலபமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

chickken chappathi roll

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் – ¼  கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது –  1  ஸ்பூன்
  3. ஜீரகத் தூள் – ½ ஸ்பூன்
  4. தனியா தூள் – 1 ஸ்பூன்
  5. தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  6. சாட் மசாலா – ¼  ஸ்பூன்
  7. மிளகு தூள் – ½ ஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு
  9. கொத்தமல்லி – சிறிதளவு
  10. கொத்தமல்லி சட்னி – ¼ கப்
  11. மைதா – 150 கிராம்

செய்முறை

  1. முதலில் சிக்கனில் உள்ள எலும்புகளை நீக்கி விட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. சிக்கனுடன் சிறிதளவு உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.
  4. பின்னர்  150 gram மைதாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.
  5. அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு 10 நிமிடத்திற்கு ஊற விடவும்.
  6. 10 நிமிடத்திற்கு பிறகு மாவை சப்பாத்தியாக தேய்த்து சுட்டு வைத்துக் கொள்ளவும்.
  7. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும்.
  8. சிக்கன் கொஞ்சம் வதங்கியவுடன்  அதில் சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், சாட் மசாலா ஆகிய எல்லாவற்றையும் போட்டு பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.
  9. சிக்கன் நன்கு வெந்ததும் சிறிதளவு மிளகு தூள் கொஞ்சம் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி வைக்கவும்.
  10. அதன் பிறகு செய்து வைத்திருக்கும் சப்பாத்தியின் மேல் கொத்தமல்லி சட்னியை தடவி விடவும்.
  11. கொத்தமல்லி சட்னிக்கு பதில் தக்காளி சாஸ் கூட பயன்படுத்தாலம்.
  12. சட்னி தடவிய பின்  அதில் வதக்கி வைத்திருக்கும் சிக்கனை வைத்து சப்பாத்தியை அப்படியே ரோலாக சுருட்டவும். சுவையான சிக்கன் ரோல் ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version