Home Tags அவல் லட்டு செய்வது எப்படிஅவல் லட்டு செய்முறை

Tag: அவல் லட்டு செய்வது எப்படிஅவல் லட்டு செய்முறை

ஆரோக்கியமான அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு

அவல் லட்டு செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. அவல் – 1 கப்
  2. வெல்லம் – 1 கப்
  3. முந்திரி, திராட்சை – தேவையான அளவு
  4. நெய் – தேவையான அளவு
  5. ஏலக்காய் – சிறிதளவு
  6. பால் – சிறிதளவு

செய்முறை

  1. அவல் லட்டு செய்வதற்கு முதலில் அவலை சுத்தம் செய்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி , திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள அவலை சேர்க்கவும்.
  4. அத்துடன் 1 கப் வெல்லத்தையும் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. அரைத்த அவலை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
  6. பின்னர் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.
  7. சிறிதளவு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து நன்கு கிளறவும்.
  8. நன்கு கலந்து விட்டு பின் லட்டு வடிவத்தில் பிடித்து வைத்தால் சுவையான ஆரோக்கியமான அவல் லட்டு ரெடி.

Aval Laddu Recipe  https://youtu.be/hgSDJGY7L7g