தலை முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில குறிப்புகள்

தலை முடி பாதுகாப்பு

நாம் உண்ணும் உணவில் அடிக்கடி பச்சை காய்கறிகள், கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். மாதுளை பழ ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது.

அடர்த்தியான தலை முடி வாரம் ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம். கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாதம் வடித்த கஞ்சி மற்றும் சீயக்காயை பயன்படுத்தலாம். தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. தினமும் தலைக்குக் குளிப்பதால் தலை முடி நன்கு வளரும்.

சிறு வயதிலிருந்தே வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும்.

பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணமாக கிடையாது. இதைத் தவிர்க்க, ‘பொடுதலை’ என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

பொடுகுத் தொல்லை நீங்க சிலர் வெள்ளை முடியை மறைக்க தொடர்ந்து தலைக்கு டை போட்டுக் கொள்வார்கள். இதனால் முடி தற்காலிகமாக கருப்பாக தெரியலாம். அனால் அது நிரந்தர தீர்வு கிடையாது. செயற்கை டை போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவதால் ஒவ்வாமை, கண் பார்வை கோளாறு, புற்று நோய் அபாயம், போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. எனவே இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி

பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய் துவையல்

நெல்லிக்காய் துவையல் தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் – தேவையான அளவு தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் – ¼...
4ம் எண்ணின் குணநலன்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
உடல் சூடு தனிய

உடலின் வெப்பத்தை தணிக்க செய்ய வேண்டியவை

உடலின் வெப்பத்தை தணிக்க செய்ய வேண்டியவை மனிதர்களுக்கு ஏற்படும்  75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம் தான். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த...
pudhirgal

Puzzles with Answers | Vidukathaigal with answers

மூளைக்கு வேலை தரும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.