சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு
தேவையான பொருட்கள்
- ஆட்டுக்கால் – 4 கால்கள்
- கத்திரிக்காய் – 4
- புளி – ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு
- வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- துருவிய தேங்காய் – 5 ஸ்பூன்
- பூண்டு – 5 பல் ( பொடியாக நறுக்கியது )
- சின்ன வெங்காயம் – 10
- சீரகத் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
- தக்காளி – 2
- மல்லித் தூள் – 1½ ஸ்பூன்
- வெல்லம் – 1 துண்டு
- கருவேப்பிலை – சிறிதளவு
- வடகம் – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் கொண்டைக்கடலையையும் குக்கரில் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- தக்காளியையும், தேங்காயையும் தனித்தனியாக மிக்சியில் சேர்த்து கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் காய்ந்ததும் வடகம், பொடியாக நறுக்கிய பூண்டு பல், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதினை சேர்க்கவும்.
- தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின் 1 ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- வேக வைத்த கொண்டக்கடலை மற்றும் ஆட்டுக்காலையும் சேர்த்துக் கொள்ளவும்.
- கடலை வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல் அதையும் சேர்த்துக் கொள்ளவும்.
- ஆட்டுக் கால் சேர்த்த பின் 2 நிமிடத்திற்கு நன்கு வதக்கி விடவும்.
- மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சீரக தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- கத்தரிக்கையை நான்கு பாதியாக கீரி சேர்த்துக் கொள்ளவும்.
- கத்தரிக்காய் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.
- புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்துக் கொள்ளவும்.
- தேங்காய் விழுது சேர்த்து 2 கொதி வந்ததும் 1 துண்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தயார்.