ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா செய்வது எப்படி

சிக்கன் சால்னா செய்வது எப்படி

ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்பதை பின் வருமாறு காணலாம். வீட்டிலேயே எப்படி செய்வது

ருசியான சிக்கன் சால்னா தேவையான பொருட்கள்

  1. கோழிக்கறி – ½ கிலோ
  2. பெரிய வெங்காயம் – 2
  3. தக்காளி – 2
  4. பிரியாணி இலை – 1
  5. பட்டை – 2 துண்டு
  6. கிராம்பு – 2
  7. ஏலக்காய் – 2
  8. சீரகம் – ¼ ஸ்பூன்
  9. சோம்பு –  ¼ ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  11. மல்லித்தூள் – 2 ஸ்பூன்
  12. மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
  13. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  14. உப்பு – தேவையான அளவு
  15. எண்ணெய் – தேவையான அளவு
  16. கறிவேப்பிலை – சிறிதளவு
  17. கொத்தமல்லி – 1 கைப்பிடி

அரைக்க

  1. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  2. மிளகு – 2 ஸ்பூன்
  3. சீரகம் – 1 ஸ்பூன்
  4. மல்லி – 1/4 கப்
  5. காய்ந்த மிளகாய் – 2
  6. தேங்காய் துருவல் – ¼ கப்

செய்முறை

  1. இஞ்சி பூண்டு விழுது, மிளகு, சீரகம், மல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  4. அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  5. பின்பு அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. இதனுடன் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு நன்கு வதக்கவும்.
  7. பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  8. சிக்கனை சேர்த்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது தண்ணியாக இருக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் சால்னா ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
ஆண் கை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

ஆண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கை மச்ச பலன்கள் உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. ஒருவருக்கு மச்சம் இந்த இடத்தில் இருந்தால் இந்த மாதிரியான...
4ம் எண்ணின் குணநலன்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய...

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் புனர்பூசம் நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மற்றும் கடகம் புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு புனர்பூசம் 1 முதல் 3 பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி - மிதுனம் :...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.