கேழ்வரகு முறுக்கு
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு – 500 கிராம்
- அரிசி மாவு – 50 கிராம்
- உடைத்த கடலை மாவு – 50 கிராம்
- சீரகம் – 1 ஸ்பூன்
- வெண்ணை – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய்த் தூள் – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- ஒரு அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவினை சலித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும்.
- அத்துடன் அரிசி மாவு, உடைத்த கடலை மாவு, வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின்னர் உப்பு, மிளகாய்த் தூள், சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்துகொள்ள வேண்டும்.
- பின்னர் முறுக்கு அச்சில் சிறிதளவு எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் முறுக்கு பொறித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு ஒரு பூந்தி கரண்டியில் பிழிந்து பின் எண்ணெயில் சேர்த்துக் கொள்ளலாம்.
- நேரடியாகவும் எண்ணெயில் பிழிந்து கொள்ளலாம்.
- முறுக்கு பிழியும் போது எண்ணெய் நன்கு சூடாக இருக்க வேண்டும்.
- பிழிந்த பின் மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் சிவக்க வைத்து எடுத்தால் சுவையான சத்தான கேழ்வரகு முறுக்கு ரெடி.