ஸ்பைசி இறால் மிளகு தொக்கு செய்வது எப்படி

இறால் மிளகு தொக்கு

இறால் மிளகு வறுவல் தேவையான பொருட்கள்

  • இறால் – 1 கப்
  • வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
  • தக்காளி – 2  ( பொடியாக நறுக்கியது )
  • இஞ்சி பூண்டு விழுது  – 2 ஸ்பூன்
  • மல்லி தூள் – 2 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1  ஸ்பூன்
  • சீரகத் தூள் – 1  ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • எண்ணெய் – தேவையான அளவு
  • முழு மிளகு – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • கடுகு – ¼ ஸ்பூன்

செய்முறை

  • மிளகு இறால் தொக்கு செய்வதற்கு முதலில் 2 ஸ்பூன் மிளகை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து  தாளிக்கவும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.
  • இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • மசாலா பச்சை வாசனை போனவுடன் இறால் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இறால் சேர்த்து நன்றாக வதக்கிய தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து இறாலை வேகவிடவும்.
  • இறாலில் இருந்து தண்ணீர் வடிந்தவுடன் சிறதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.
  • இறால் வெந்தவுடன் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கலந்து பின் சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் மிளகுத் தொக்கு ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? ஸ்திரீ என்றால் பெண் என்று அர்த்தம், தீர்க்கம் என்றால் முழுமையான அல்லது இறுதியான என்று அர்த்தம். ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்பது பொருள் வளத்தையும், செல்வத்தையும், செல்வாக்கையும்...
நட்சத்திர தோஷம்

நட்சத்திர தோஷங்களும், பரிகார முறைகளும்

நட்சத்திர தோஷங்களும், பரிகாரங்களும் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதங்களும் உண்டு. இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும் நட்சத்திர பாதத்தில்...
செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal) இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது,...
மட்டன் மசாலா

மதுரை மட்டன் மசாலா 

மதுரை மட்டன் மசாலா தேவையான பொருட்கள் மட்டன் – ½ கிலோ வெங்காயம் - 2  ( பொடியாக நறுக்கியது ) தனியாத்தூள் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1...
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடி சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம்...
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.