சுவையான மீன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?

மீன் மிளகு வறுவல்

மீன் ஒரு சத்தான ஆரோக்கியமான உணவாகும். மீனில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மீனை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை குறைபாடு, இதயம் சார்ந்த நோய்கள் வருவது தவிர்க்கப்படும். மீன் குழம்பு , மீன் வறுவல் என இரண்டு விதமாக செய்யலாம். அதில் மீன் வறுவல் மிகவும் ருசியான உணவாகும். சுவையான மீன் மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

மீன் வறுவல் தேவையான பொருட்கள்

 1. மீன் – 1 கிலோ
 2. மிளகு தூள் – 2 ஸ்பூன்
 3. சீரகம் தூள் – 1 ஸ்பூன்
 4. சோம்பு தூள் – 1 ஸ்பூன்
 5. தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
 6. மஞ்சள் தூள் – ¼ தூள்
 7. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
 8. எலுமிச்சை சாறு – சிறிதளவு
 9. சோள மாவு – 2 ஸ்பூன்
 10. உப்பு – தேவையான அளவு
 11. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

 1. மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 2. மீனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில்  மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகு தூள், தனி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, சோள மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
 3. மசாலா முழுவதும் மீனுடன் சேரும் அளவிற்கு நன்கு பிசறி விடவும்.
 4. தேவை என்றால் கேசரி கலர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.
 5. மீனை ½ மணி நேரம் ஊற விடவும்.
 6. ½ மணி நேரம் ஊறிய பின் மீனை தோசை தவாவில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் சிவந்து வரும் வரை வறுத்து எடுக்கவும்.
 7. மீனை வறுக்கும் போதே சிறிதளவு கறிவேப்பிலையை மீனுடன் சேர்த்து வறுத்து பரிமாறினால் சுவையான மீன் மிளகு வறுவல் தாயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....
chickken chappathi roll

சிக்கன் ரோல் செய்வது எப்படி

சிக்கன் ரோல் சிக்கனை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி சிக்கன் ரோல் சுலபமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் – ¼  கிலோ இஞ்சி பூண்டு விழுது...
இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....
திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
உள்ளங்கை தரிசனம்

காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

  காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில்...
செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ பட்டை – 1 துண்டு புளி – சிறிதளவு தனியாத் தூள் – ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½...
காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.