தந்தூரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி

எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தந்துரி சிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்

 1. சிக்கன் தொடை பகுதி – 4
 2. தயிர் – ஒரு கப்
 3. இஞ்சி பூண்டு விழுது – 50 கிராம்
 4. கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
 5. எலுமிச்சை சாரு – சிரிதளவு
 6. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
 7. கரம் மசாலா – 1 ஸ்பூன்
 8. மிளகு தூள் – 1 ஸ்பூன்
 9. சீரகத்தூள் – 1 ஸ்பூன்
 10. கஸ்துரி மேத்தி – ½ ஸ்பூன்
 11. உப்பு – தேவையான அளவு

பிரியாணி செய்ய

 1. பாஸ்மதி அரிசி – ½ கிலோ
 2. வெங்காயம் – 4
 3. தக்காளி – 4
 4. இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
 5. பச்சை மிளகாய் – 2
 6. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
 7. கரம் மசாலா – 1 ஸ்பூன்
 8.  புதினா – 1 கைப்பிடி
 9.  கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
 10. பட்டை – 1 பெரிய துண்டு
 11. பிரிஞ்சு இலை – 2
 12. இலவங்கம் – 3
 13. ஏலக்காய் – 2
 14. அண்ணாசிப்பூ – 2

செய்முறை

 1. சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
 2. பாஸ்மதி அரிசியை ½ மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
 3. ஒரு மிக்சி ஜாரில் தயிர், கொத்தமல்லி , இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாரு , மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரக தூள், கஸ்துரி மேத்தி, சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து அதில் சிக்கனுடன் நன்கு கலந்து ஊற வைக்கவும்.
 4. சிக்கன் 1 மணி நேரம் ஊறிய பின் எண்ணெய் சேர்த்து பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 5. பின்னர் பிரியாணி செய்ய ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
 6. பிரியாணிக்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
 7. எண்ணெய் சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை, இலவங்கம், ஏலக்காய் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.
 8. தாளித்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 9. வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
 10. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 11. மிளகாய் தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
 12. மசாலா பச்சை வாசனை போனவுடன் பொறித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்.
 13. 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 14. நன்கு கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை கலந்து, சிறிதளவு எலுமிச்சை சாறு, கேசரி கலர் சேர்த்து வேக விடவும்.
 15. அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.
 16. பின்னர் அடுப்பை அனைத்து ½ மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கற்றாழை வளர்ப்பது எப்படி

கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை கற்றாழை ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. கற்றாழை லில்லியேசி என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக்...
யோகங்கள் என்றால் என்ன

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #4

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் உண்டாகும் யோகங்களை குறிப்பதாகும். அவ்வாறான சில கிரக இணைப்புகள் நல்ல பலன்களையும், சில தீய பலன்களையும் தரலாம்....

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செட்டிநாடு உணவுகள் என்றாலே பாரம்பரிய சுவையும், மணமும் கொண்டதாகும். செட்டிநாடு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரத்தியேக மசாலாக்களால் உணவுகள் மிகுந்த சுவையும், மணமும், ஆரோக்கிய குணமும் கொண்டதாக இருக்கும். அந்த...
குபேர எந்திரம்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள் தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும். தீபாவளி...
banana halwa recipe

வாயில் வைத்த உடன் கரையும் வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா தேவையான பொருள்கள் வாழைப்பழம் – 3 பால் – 1 கப் சர்க்கரை – ½ கப் நெய் – ¼ கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு...
மருதாணி இலை பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும்...
மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?எவ்வாறு பார்க்க வேண்டும்

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன? திருமணம் ஆகப்போகும் மணமகன், மணமகள் இருவருக்கும் இடையே மகேந்திர பொருத்தம் இருப்பது மிகவும் முக்கியமாகும். மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை நிலைக்க செய்வது, அதாவது இந்த மகேந்திர...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.