ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா

aarkadu makkan bedaதேவையான பொருட்கள்

  1. மைதா – 1 கப்
  2. இனிப்பு இல்லாத கோவா – 150 கிராம்
  3. வெண்ணெய்  – 1 ஸ்பூன்
  4. சமையல் சோடா – 1 சிட்டிகை
  5. எண்ணெய் – தேவையான அளவு

பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

  1. பொடியாக நறுக்கிய முந்திரி , பாதாம் பருப்பு – 1 ஸ்பூன்
  2. சாரைப் பருப்பு – 1 ஸ்பூன்
  3. குங்குமப்பூ – சிறிதளவு

சர்க்கரை பாகு செய்ய

  1. சர்க்கரை – 1 1/2 கப்
  2. தண்ணீர் – 1 கப்

செய்முறை

  1. சமையல் சோடாவுடன் வெண்ணெயைச் சேர்த்து நுரைபோல் வரும் வரை தேய்க்கவும்.
  2. மைதாவை முதலில் நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்.
  3. மைதாவுடன் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. இத்துடன் இனிப்பு இல்லாத கோவா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  5. தேவைபட்டால் சிறிதளவு பால் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
  6. பூரணம் செய்வதற்கு பாதாம், முந்திரி, சாரபருப்பு, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
  8. 11/2 கப் சர்க்கரைக்கு 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  9. சர்க்கரை பாகு சிறு கம்பி பதம் வரும் அளவிற்கு பாகை தயாரித்துக் கொள்ளவும்.
  10. பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  11. உருண்டையின் நடுவில் லேசாக தட்டி அதன் உள்ளே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மூடிவிடவும்.
  12. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  13. பொறித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊறவைத்து பரிமாறினால் சுவையான ஆற்காடு மக்கன் பேடா தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

போட்டிக் குழம்பு

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி 

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி ஆட்டுக் குடல் நம் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் குடலை அடிக்கடி நாம் சமைத்து சாப்பிடும் போது உடல் சூட்டினால் உண்டாகும்...
ஆண் மலட்டு தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள் நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு - பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின் காரணமாக ஆண்களுக்குகூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் உடலில் உயிர்...
வயிறு மச்ச பலன் பெண்கள்

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள்

ஆண் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள் ஆண் மற்றும் பெண்ணின் கழுத்தின் முன் பக்கம், பின் பக்கம் போன்ற இடங்களில் இருக்கும் மச்சம் நீண்ட ஆயுளைத் தரும். இவர்கள் மந்தமான போக்கு கொண்டவர்களாக...
மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...
இறந்தவர்கள் பற்றிய கனவு

இறந்தவர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

இறந்தவர்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒருவர் திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள். அலறுவதர்கான காரணம் கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், இறந்தவர்கள் கனவில் வந்தார்கள்...
prawn recipes

இறால் குழம்பு

இறால் குழம்பு தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ உருளைக்கிழங்கு -  1 ( பெரியது ) முருங்கைக்காய் - 1 கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய் தூள் -  2 ஸ்பூன் ...
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.