ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப்

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

 1. ஆட்டுக்கால் – 4
 2. தனியா தூள் – 2 ஸ்பூன்
 3. மிளகு தூள் – 2 ஸ்பூன்
 4. சீரகத் தூள் – 2 ஸ்பூன்
 5. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
 6. பூண்டு பல்(தோலுடன்) – 10
 7. இஞ்சி – 1 துண்டு
 8. பச்சை மிளாகாய் – 1
 9. சின்ன வெங்காயம் 100 கிராம்
 10. தக்காளி – 1
 11. நல்லெண்ணெய் – தேவையான அளவு
 12. உப்பு – தேவையான அளவு
 13. கொத்தமல்லி தழை – சிறிதளவு
 14. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

 1. முதலில் ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
 2. சுத்தம் செய்த ஆட்டுக்கால்களை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். ஆட்டுக்காலுடன் 100 கிராம் சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
 3. இஞ்சி, பூண்டு இரண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை அரைத்து சேர்க்காமல் தட்டி சேர்ப்பதால் சூப்பின் சுவை அதிகரிக்கும்.
 4. பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
 5. தனியா தூள், மிளகு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் , ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
 6. இவை அனைத்தையும் சேர்த்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 7. குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
 8. விசில் அடங்கியவுடன் குக்கரை திறக்கவும்.
 9. இப்போது ஆட்டுக்கால் சூப் தாளிப்பதற்கு ஒரு சின்ன கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
 10. எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கடுகு , சிறிதளவு சீரகம், 2 சின்ன  வெங்காயத்தை நன்றாக இடித்து  சேர்த்துக்  கொள்ளவும்.
 11. சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
 12. தாளித்தவற்றை சூப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
 13. கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மூச்சுபயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்

உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் நம் அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் நாம் வாழும் வாழக்கை முறை, உணவு...
Brain Games

Brain Teasers with Answers | Tamil Puzzles with Answers | Tamil Puthirgal

மூளைக்கு வேலை கொடுக்கும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
ராம நவமி விரதம் இருப்பது எப்படி

ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி...
ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...
மூச்சுத்திணறல் வர காரணம்

மூச்சிரைப்பு ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் நம் இதயத்துக்கு தேவையான அளவு ஆக்சிஜனை நுரையிரலால் அனுப்ப முடியாதபோது மூச்சிரைப்பு மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படுகிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூசுகளால்...
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன் அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.