ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா

ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்ய தேவையான பொருட்கள்

1. ஆட்டுக்கால் – 4
2. வெங்காயம் – 4
3. தக்காளி – 3
4. இஞ்சி பூண்டு விழுது – 4 மேஜைகரண்டி
5. கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு
6. பச்சை மிளகாய் – 5
7. தேங்காய் பால் – 1 கப்
8. தேங்காய் துருவல் – 1/4 கப்
9. முந்திரி – 10
10. கசகசா – 1 மேஜைகரண்டி
11. மஞ்சள் தூள் – 1 மேஜைகரண்டி
12. மிளகாய் தூள் – 2 மேஜைகரண்டி
13. உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

1. சோம்பு – 1 மேஜைகரண்டி
2. பிரிஞ்சி இலை – 2
3. பட்டை – 4 துண்டு
4. லவங்கம் – 4
5. ஏலக்காய் – 4
6. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

1. தேங்காய் துருவல், முந்திரி, கசகசா, 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

2. 2 வெங்காயம் மற்றும் ஒரு தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் வைத்து கொள்ளவும்.

3. ஆட்டுக்காலை நன்றாக சுத்தம் செய்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

4. மீதமுள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

5. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான மேற்கூறிய பொருட்களை தாளித்து கொள்ளவும்.

6. தாளித்து முடித்ததும் வெங்காயம், மீதமிருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக்கும் வரை நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.

7. இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அவை நன்றாக வதங்கிய பின் வேக வைத்துள்ள ஆட்டுக்கால் கலவையை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

8. நன்றாக கொதிக்கும் போது தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

9. இப்போது சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.

இதனுடன் சூடான சப்பாத்தி, நாண், பரோட்டா, ஆப்பம், தோசை, இடியாப்பம் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு – 1 கப் சர்க்கரை – ¾ கப் நெய் – ¼ கப் தண்ணீர் – சிரிதளவு செய்முறை பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி...
பால் பணியாரம் செய்வது எப்படி

செட்டிநாடு பால் பணியாரம்

செட்டிநாடு பால் பணியாரம் தேவையான பொருட்கள்  பச்சரிசி - 1 கப் உளுந்து - 1 கப் தேங்காய் துருவல் – 2 கப் ஏலக்காய் - தேவையான அளவு சர்க்கரை – 1...
நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி

பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய் துவையல்

நெல்லிக்காய் துவையல் தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் – தேவையான அளவு தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் – ¼...
சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி பொது பலன்கள் – சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி குணங்கள் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதமும் அடங்கியுள்ளன. சிம்ம ராசியானது கால புருஷனின் இதயத்தை...

எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல் மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை...
திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
கறிவேப்பிலை நன்மைகள்

கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை கறிவேப்பிலை கறியில் போடப்படும் இலை என்பதாலும், அந்த கறிவேப்பிலை இலை அமைப்பு வேப்பிலையின் அமைப்பு போன்றே இருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றது. கறிவேப்பிலை பல்வேறு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.