ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள்
ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொருத்து அந்த ஜாதகர் யோகம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும், யோகமற்றவராகவும், தோஷமுள்ளவராகவும் ஆக்குகிறது. யோகங்களும், தோஷங்களும் பொதுவாக எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படுகின்ற ஒன்றாகும்.
ஜாதகத்தில் யோகங்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் யோகங்கள் நிறைய இருக்கலாம். ஆனால் அந்த யோகத்தை கொடுக்கக்கூடிய தசாபுத்திகள் வந்தால் மட்டுமே யோகங்கள் நற்பலனை கொடுக்கும். சில ஜாதகங்களில் எண்ணற்ற ராஜ யோகங்கள் இருக்கும். ஆனால் அந்த யோகங்களை கொடுக்கின்ற கிரகங்கள் கெட்டு தோஷங்களாக உருமாறுகிறது. இதனால் முழுமையான யோகங்களை பெற்றும் அதிர்ஷ்டமில்லாமல் போகிறது.
ஜாதகத்தில் தோஷங்கள்
ஒருவர் முற்பிறவியில் செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை பொருத்தும், அவர்களின் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலும் பிறக்கும் போதே நம் ஜாதகத்தில் அந்த பாவ புண்ணியங்கள் தோஷம் மற்றும் யோகமாக அமைகிறது.
இந்த காலக்கட்டத்தில் தோஷத்தால் பாதிகப்பட்ட பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் தோஷங்களை போக்கிக்கொள்ள பல கோவில்களை நோக்கி பயணிக்கின்றனர். நமக்கு வரும் தோஷங்கள் எதனால் வருகின்றது, என்ன செய்ய வேண்டும், எந்த கோவில்களுக்கு சென்று என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அந்த வகையில் இந்த பதிவில் பல்வேறு தோஷங்களின் வகைகளையும், அதற்கு உண்டான பரிகாரங்களையும் விரிவாக பார்க்கலாம்.
ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வகைகள்
2. பித்ரு தோஷம்
5. சர்ப்ப தோஷம்
8. நாக தோஷம்
10. நவகிரக தோஷம்
11. சகட தோஷம்
12. புனர்பூ தோஷம்
13. தார தோஷம்
போன்றவை ஒருவரின் ஜாதகத்தில் காணப்படுகின்ற பொதுவாக தோஷங்களாகும். இவை மட்டுமல்லாமல் நமக்கு தெரியாத நவகிரக தோஷங்கள் மற்றும் பல்வேறு தோஷங்களை பற்றி பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம். இந்த தோஷங்கள் நம் ஜாதகத்தில் இருப்பதால் திருமணம், தொழில், குடும்பம், குழந்தைகள், வியாபாரம், ஆரோக்கியம் போன்ற பல்வேறு குறைபாடுகள் வாழ்வில் ஏற்படும். இந்த தோஷங்களை எவ்வாறு அறிந்து கொள்வது, அது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும், அவற்றுக்கு எந்த மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம் என்பதை விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் அறிந்து கொள்ளலாம்.