ஆண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் உடல் மச்ச பலன்கள்

எல்லோருக்கும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் மச்சங்கள் இருக்கும். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். அந்த வகையில் ஆணின் உடலில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களின் பலன்களை கீழ்கண்ட பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

ஆண் உடல் மச்ச பலன்கள்

ஆண் கழுத்து மச்ச பலன்கள்

  • கழுத்தின் வலதுபுறம் மச்சம் இருந்தால் சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை போன்றவை அமையும்.
  • கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மத்திம நலன்களுடன் வாழ்வார்.
  • கழுத்தின் நடுவே மச்சம் இருந்தால் நல்ல பலன்களைக் கொடுக்காது.
    கழுத்தின் மேற்பக்கம் மச்சம் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் மிகுந்திருக்கும்.
  • கழுத்தின் கீழ்ப்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்களிடம் புத்திசாலித்தனத்தை எதிர்பார்க்க முடியாது.
  • கழுத்தின் பின்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் ஆடம்பரப் பிரியர்களாய் இருப்பார்கள்.
  • தொண்டையில் மச்சம் இருப்பவர்களுக்கு திருமணத்தின் மூலம் சொத்து சேர்க்கை உண்டாகும்.

ஆண் மார்பு மச்ச பலன்கள்

  • இடது மார்பு பக்கம் மச்சம் இருப்பவர்கள் எந்தக் காரியத்தில் இறங்கினாலும் அதை முடிக்காமல் விட மாட்டார்கள். மேலும் இவர்களுக்கு ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
  • வலது மார்பு பக்கம் மச்சம் உள்ளவர்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவரின் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்கள்.
  • மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தேவை இல்லாமல் தலையிடுவார்கள். ஆனால் அதே சமயத்தில் அமைதியான சுபாவத்துடன் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்கள்.

ஆண் மரபு பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் வயிறு மச்ச பலன்கள்

  • வயிறு பகுதியில் மச்சம் உள்ளவர்களிடம் பொறாமை குணமும், தகுதிக்கு மீறிய ஆசையும் இருக்கும்.
  • வயிற்றின் வலது பக்கம் மச்சம் உள்ளவர்கள் வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லாமல் வாழ்வார்கள்.
  • வயிற்றின் இடது பக்கம் மச்சம் உள்ளவர்கள் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • அடிவயிறு பகுதியில் மச்சம் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார ஆடம்பர வாழ்க்கை போன்றவை கிடைக்கும்.
  • வயிற்றின் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் உடலளவில் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.
  • தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவர்களுக்கு வசதியான வாழ்க்கை அமையும்.

ஆண் முதுகு மச்ச பலன்கள்

  • முதுகில் மச்சம் இருப்பவர்கள் அறிவாளிகளாகவும் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
  • முதுகின் வலதுபக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • முதுகின் இடதுபக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர்கள் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார்கள். எந்த செயலில் இறங்கினாலும் அதில் தீவிரமாக ஆலோசித்து பிறகு அதை செய்வார்கள்.

ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #9

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து ஜோதிடரால் கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
சிக்கன் பிரைடு ரைஸ் செய்முறை

சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டில் செய்வது எப்படி

சிக்கன் பிரைடு ரைஸ் சைனீஸ் உணவு வகைகள் மிகவும் விரைவாக செய்யக்கூடியவை மற்றும் ருசி மிகுந்தவை. இதற்கு உதாரணம் நம் ஊரில் தெருக்கு தெரு இருக்கும் துரித உணவு கடைகள் தான். அந்த வகையில்...
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...
raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...
உடல் கழிவுகள் நீங்க

உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளும் வெளியேற்றும் வழிகளும்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் அற்புத வழிகள் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்ட பின் அதன் கழிவுகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தலின் மூலம் வெளியேறி விடும். சில...
பௌர்ணமி திதி

பௌர்ணமி திதி பலன்கள், பௌர்ணமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

பௌர்ணமி திதி பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் பௌர்ணமி முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆடி பௌர்ணமி, சித்திர பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை முக்கியமான பௌர்ணமி தினங்களாகும். பௌர்ணமி...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.