ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம்
ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு
ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன்
ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத் தெய்வம் : பெருமாள்
ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர குணம் : தேவ கணம்
ரேவதி நட்சத்திரத்தின் விருட்சம் : இலுப்பை
ரேவதி நட்சத்திரத்தின் மிருகம் : பெண் யானை
ரேவதி நட்சத்திரத்தின் பட்சி : வல்லூறு
ரேவதி நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்

ரேவதி நட்சத்திரத்தின் வடிவம்

ரேவதி நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 27வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘தோணி’ என்ற பெயரும் உண்டு. ரேவதி நட்சத்திரம் வான் மண்டலத்தில் ‘மீன், படகு’ போன்ற வடிவங்களில் காணப்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவர்வதில் வல்லவர்கள். இவர்கள் நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பவராகவும் விளங்குவார்கள். பெரியவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அளிப்பார்கள். அழகிய விழிகளை கொண்டவர்கள். பேச்சில் அனைவரையும் கவரக்கூடியவர்கள். தேவை இல்லாமல் பேச மாட்டார்கள். மற்றவர்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கவும் மாட்டார்கள்.

இவர்கள் மனம் போகிற போக்கில் நடப்பவர்கள். தனக்கு சரி என்று பட்டதை துணிந்து செய்வார்கள். மற்றவர்களின் அபிப்ராயங்களைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். தன்னுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக சொல்லி எப்படி வாழ வேண்டும் என புரிய வைப்பார்கள். இவர்கள் சரியான சந்தேக பேர்விழிகள். மற்றவர்கள் எவ்வளவுதான் உயிருக்கு உயிராக பழகினாலும அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். நம்பி விட்டால் அவர்களை விட்டு விலகுவதே இல்லை. பழி பாவத்திற்கு பயந்தவர்கள். சமயோகித புத்திசாலித்தனம் கொண்டவர்கள்.

தன் சுய முயற்சியில் முன்னுக்கு வருவார்கள். புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் இவர்கள் கூடப் பிறந்தது. வாழ்க்கை சுமாராக அமையும். உணவை ருசித்து சாப்பிடுவதில் வல்லவர்கள். புகழுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். நெடுந்தூர பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள். குருமார்களிடம் நல்ல மதிப்பை பெற்றவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். சிறந்த குணங்களைக் கொண்டவர்கள். இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். நேர்மையாக வாழ்பவர்கள், பேச்சில் இனிமை, கொடுக்கல் வாங்கலில் நாணயம், உள்ளவர்கள்.

சுதந்திரப் பிரியர்கள், இவர்களுக்கு ரகசியம் காக்கத் தெரியாது. இவர்களின் மூளையே இவர்களின் மூலதனம் ஆகும். அழகான உடலைப்பை கொண்டவர்கள். பிறரை பார்த்தவுடன் வசீகரிக்கும் கண்களை கொண்டவர்கள். இவர்களுக்கு எதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அனைவரைரையும் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். எல்லாருக்கும் நன்மை செய்ய நினைப்பார்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை எடை போட முடியாது. அழகான சிரித்த முகத்தை கொண்டவர்கள். எந்த இடத்தில எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். சேமிக்கும் குணத்தைக் கொண்டவர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்கள்.

ரேவதி நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சண்டையில் வல்லவர்கள். ஆராய்வதில் சிறந்தவர்கள். இவர்கள் தான் வகிக்கும் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள். மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள். பயனங்கள் செய்வதில் அதிக நாட்டமுடையவர்கள். தங்களுடைய செயல்பாடுகள் மூலம் மற்றவர்களை கவர்ந்து இழுப்பார்கள்.

ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். பல திறமைகளை கொண்டவர்கள். செயல்திறன் கொண்டவர்கள். இவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்கள். உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். ஆடம்பர செலவுகளை விரும்பாதவர்கள். இவர்களின் மனம் அடிகடி சஞ்சலமடையும். இவர்கள் மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள். முன் கோபம் இவர்களின் சுபாவமாக இருக்கும்.

ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சிந்திக்காமல் செயல்படக்கூடியவர்கள். கடவுள் பக்தி நிறைந்தவராக இருப்பார்கள். சுயநலம் உடையவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தன்னை போலவே மாற்றவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள்.

ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எதையும் செய்யக்கூடியவர்கள். உண்மை பேசுபவராக இருப்பார்கள். சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள். எதிரிகளை எளிதாக வெல்வார். சத்தியத்தை பேசுபவர்கள். எதிரிகளை வெல்லக்கூடியவர்கள். இவர்கள் நீதிமான்களாக இருப்பார்கள். வீரம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பிறரை மதிக்கக்கூடியவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பூக்கள் கனவு பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகள் தூக்கத்தின் போது வருகின்றன. அதில் ஒருசில கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில் பலருக்கும் பூக்களை பற்றிய...
chickken chappathi roll

சிக்கன் ரோல் செய்வது எப்படி

சிக்கன் ரோல் சிக்கனை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி சிக்கன் ரோல் சுலபமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் – ¼  கிலோ இஞ்சி பூண்டு விழுது...
tamil brain games

Most intelligent riddles | puthirgal with Answers | Brain Teasers

மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்வி பதில்கள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். அதில் ஒன்றுதான் சிக்கன் நூடுல்ஸ். தற்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள்...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.