உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள்

நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி, மற்றும் கைகளை பராமரிக்க செலவிடும் நேரத்தில் 1 பங்கு கூட தங்கள் பாதங்களைக வனிப்பதில் செலவிடுவதில்லை.

அழகான பாதங்கள் நம் உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள் தான். அதனால் பாதங்களை கவனிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். முகத்திற்கு எப்படி ஈரப்பதம் மிகவும் முக்கியமோ அதே போல் நம் பாதங்களுக்கும் ஈரப்பதம் மிகவும் முக்கியமான் ஒன்றாகும்.

பாதங்கள் பராமரிப்பு

பாதங்களை எப்பொழுதும் ஈரப்பதத்துடனும் வறட்சி இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். பாதத்தை நாம் சரியாக பராமரிக்கா விட்டால் பாதத்தில் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, வெடிப்பு, வீக்கம் , வலி, துர்நாற்றம் , விரல் நகங்களில் சொத்தை, விரல் இடுக்குகளில் புண்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

பாதங்களில் ஏற்படும் புண்கள், சிறு சிறு கீறல்கள் போன்றவற்றை அலட்சியமாக கருதக்கூடாது. உடனுக்குடன் அதை சரிசெய்துவிட வேண்டும். இல்லையென்றால் அது பாதங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் பாதங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள் பாதிகளில் சிறு புண்கள் கூட ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நகங்கள் பராமரிப்பு

வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.  நகங்களில் அழுக்கு, மண் துகள்கள் போன்றவை சேராமல் பார்த்து கொள்வது அவசியம்.

கால் நகங்களை மிக நீண்டதாக வளர்ப்பதை தவிர்க்கவும். நகங்களை வெட்டுவதற்கு முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விடவும். பாதங்களை கழுவிய பின் நகங்கள் ஈரமாகவும் மென்மையாகவும் இருக்கும் இந்த நேரத்தில் நகங்களை வெட்டினால் வலியோ, காயங்களோ ஏற்படாது.

காலணிகள்

நமது பாதங்களுக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம் உடல் வாகுக்கு ஏற்றவாறு ஆடை அணிவதை போல நம் பாதத்திற்கு ஏற்றவாறு காலனிகளை அணிவதும் முக்கிமாகும்.ஒரு சில காலணிகள் பாதத்தில் காயங்கள் ஏற்படுத்திவிடும். அதனால் காலணிகளை வாங்கும் போது அது நம் கால்களுக்கு பொருந்துமா என்று பார்த்து வாங்க வேண்டும்.

சீரான உடல் எடை

பாதங்கள் தான் நம்முடைய உடலைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம். எனவே தான் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு கால்கள், மற்றும் பாதங்களில் அதிக வலி மற்றும் வீக்கம் உண்டாகும். இவை எதனால் ஏற்படுகிறது என்றால் உடலின் மொத்த பாரத்தையும் பதங்களே தாங்கி சுமக்கின்றன. எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும் பாதத்திற்கு நாம் செய்யும் மிக முக்கிய நன்மைகளில் ஒன்றாகும்.

நாம் குளித்து முடித்தவுடன் உடலை எப்படி துடைத்து சுத்தபடுத்துகின்றோமோ அதே போல் நாம் பாதங்களையும் நன்றாக துடைக்க வேண்டும். ஆனால் பலரும் இதை செய்வதே இல்லை. தினமும் இரவு படுப்பதற்கு முன் பாதங்களை நன்றாக வெந்நீரில் கழுவி துடைத்து விட்டு சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து நன்றாக பாதங்களின் எல்லா பக்கங்களிலும் மென்மையாக தேய்த்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பாதங்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

பாதங்கள் மிருதுவாக பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள சில வழிகள்

  • பாதத்தில் வெடிப்பு ஏற்பட்ட அதனால்  பாதிக்கப்பட்டவர்கள் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
  • உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி,  பாதம் மிளிரும்.
  • மிகவும் இறுக்கமான காலணிகளை அணிவதை தவிர்க்கவும். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும்.
  • தினமும் இரண்டு வேளை பாதங்களில் மிருதுவாக்கும் க்ரீம்  தடவி வந்தால் பாதங்கள் வறண்டு போகாமல் இருக்கும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேன் சேர்த்து அந்த தண்ணீரில் காலை வைத்தால் பாதங்கள் வறண்டு போகாமல், அழகாக இருக்கும்.
  • ஆலிவ் எண்ணெயை பாதங்களில் மசாஜ் செய்து வந்தால் வெடிப்பு, வறண்ட பாதங்களிலிருந்து தீர்வு கிடைக்கும்.
  • பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது ஆகிய உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
  • தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர், எலுமிச்சை சாறு, ஷாம்பூ, கல் உப்பு இவற்றை சேர்த்து அதில் பதங்களை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதங்களை நன்கு தேய்த்து மசாஜ் செய்வது போல் செய்தால் பாதங்கள் மிருதுவாகவும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும்
  • வெந்நீரில் சிறிதளவு தேன் கலந்து பாதங்கள் முழுவதும் தடவி மசாஜ் செய்து ஒரு 10 நிமிடம் அப்படியே விட்டு விடவும். நன்கு காய்ந்த உடன் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவவும். இவ்வாறு செய்தால் பாதங்கள் சொரசொரப்பு தன்மை இல்லாமல் மிருதுவாக இருக்கும்.
  •  மருதாணி பொடியுடன்  தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் போடுவது  மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி பாதங்களை  மென்மையாக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நாக தோஷ பரிகார தலங்கள்

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும்....
கண் திருஷ்டி நீங்க

உங்கள் குழந்தைக்கு கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட... கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு... 1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக...
கொய்யா பழம் மருத்துவ குணங்கள்

கொய்யா பழம் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

கொய்யா கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் கொய்யா...
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : மகேஸ்வரன் திருவாதிரை நட்சத்திரத்தின் பரிகார...
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
அடர்த்தியான தலை முடி

தலை முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில குறிப்புகள்

தலை முடி பாதுகாப்பு நாம் உண்ணும் உணவில் அடிக்கடி பச்சை காய்கறிகள், கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்....
எலுமிச்சை மருத்துவ பயன்கள்

எலுமிச்சை பழத்தின் எண்ணிலடங்க மருத்துவ குணங்கள்

எலுமிச்சை பழம் எலுமிச்சை ‘ஓசுபேக்’ என்ற தாவரவியற் பெயர் கொண்ட தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இந்த எலுமிச்சை மரம் ருட்டேசி RUTACEAE என்னும் தாவர குடும்பத்தை சார்ந்தது. எலுமிச்சை மரம் வெப்ப மற்றும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.