திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம்
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன்
திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : மகேஸ்வரன்
திருவாதிரை நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : துர்க்கை
திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : மனுஷகணம்
திருவாதிரை நட்சத்திரத்தின் விருட்சம் : செங்கரு (பாலில்லா மரம் )
திருவாதிரை நட்சத்திரத்தின் மிருகம் : செந்நாய்
திருவாதிரை நட்சத்திரத்தின் பட்சி : சிட்டுக்குருவி
திருவாதிரை நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
திருவாதிரை நட்சத்திரத்தின் வடிவம்
திருவாதிரை நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 6ம் இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘மூதிரை’ என்ற பெயரும் உண்டு. திருவாதிரை நட்சத்திரம் வான் மண்டலத்தில் மனித தலை போன்றும், வைரம், கண்ணீர் துளி போன்றும் காட்சியளிக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
இது தில்லையில் அருள்புரியும் நடராஜர் அவதரித்த நட்சத்திரமாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல புத்திசாலியாகவும், பேச்சுகளில் வல்லவராகவும் இருப்பார்கள். கல்வியில் நாட்டம் குறைவாக இருக்கும். தந்திரமாக பேசி காரியங்களை முடிப்பார்கள். இவர்களுக்கு கோபமும், முரட்டு தனமும் அதிகம் இருக்கும். அழகான தோற்றம் கொண்டவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோசமான கோப சுபாவம் கொண்டவராகவும் இருப்பார்கள். ஆனாலும் அறிவுத் திறன்பெற்ற புத்திசாலியாக இருப்பார்கள். இவர்கள் சரியான காரியவாதிகள். சந்தர்பத்திற்கு ஏற்றவாறு பேச்சை மாற்றி மாற்றி பேசுவார்கள். இவர்கள் வாழ்க்கையில், வசதிகளும் சுகபோகங்களும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதற்காக கடினமான உழைக்க வேண்டியிருக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணத்தேவை என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தன்னை சுற்றி இருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல தங்களை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள். இவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களை முடிக்காமல் விட மாட்டார்கள். தற்பெருமை அதிகம் கொண்டவர்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெரும்பாலோனோர் சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமப்பார்கள். உறவினர்களை விட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்கு காம வேட்கை அதிகம் இருக்கும். அவசர அவசரமாக காரியங்களை செய்வார்கள். இவர்கள் செலவாளியாக இருப்பதுடன், துன்பங்கள் நேரிடும்போதும், மனம் கலங்காமல் இருப்பார்கள். 25 வயதுக்குப் பிறகு இவர்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள்.
இவர்கள் பிரதிபலன் பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். இவர்கள் சேமித்து வாழ வேண்டும் என விரும்புவார்கள். எல்லாவற்றையும் முன்னின்று நடத்தும் விருப்பமுடையவர்கள். அழகான கண்களை கொண்டவர்கள். பெரும் புகழுக்கு உரியவர்கள்.
திருவாதிரை நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எளிதில் பழகக்கூடியவர்கள். நற்குணங்களுக்கு சொந்தக்காரர். ஆடம்பரமாக வாழ விருப்பம் உடையவர்கள். கணக்கில் சாமர்த்தியசாலியானவர்கள். இதமான, மகிழ்ச்சியான பேச்சுகளை பேசக்கூடியவர்கள். நல்ல குணங்களை தன்னுளே கொண்டவர்கள். கோவம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். இவர்களிடம் கோவமும், குணமும் சேர்ந்தே இருக்கும். இவர்கள் கலகலப்பாக பேசுவதில் வல்லவர்கள்.
திருவாதிரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். முரட்டுச் சுபாவம் கொண்டவர்கள். கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். உறவினர்களிடம் பகைமை உடையவர்கள். இவர்கள் பேசுவதில் கெட்டிக்காரர்கள். மற்றவரின் சொல்லுக்கு கட்டுப்படாமல் தர்க்கம் புரிவார்கள். பிடிவாத குணம் உடையவர்கள். மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள்.
திருவாதிரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நிதானம் இல்லாதவர்கள். திமிரான பேச்சுகளை பேசுபவர்கள். புறம் பேசும் குணம் உடையவர்கள். இவர்கள் மிகவும் முரட்டு பிடிவாதம் கொண்டவர்கள். தற்புகழ்ச்சியை அதிகம் விரும்புவார்கள். இரகசியம் உடையவர்கள். புகழை விரும்பக்கூடியவர்கள். எதிலும் நிதானம் இல்லாமல் அவசரமாக முடிவெடுப்பார்கள். அவசர முடிவு எடுத்து விட்டு பின்பு அதற்காக வருந்துவார்கள்.
திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சாந்த குணம் உடையவர்கள். வஞ்சக எண்ணம் கொண்டவர்கள். ஞாபக மறதி உடையவர்கள். இவர்கள் அழகான உடல் வாகு கொண்டவர்கள். சிறந்த இவர்களிடம் பக்தியும், தர்மசிந்தனையும் அதிகம் இருக்கும். பொது வாழ்வில் அதிக ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உறவினரின் பகை இவர்களுக்கு அதிகம் இருக்கும். படிப்பது மற்றும் எழுதுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். விவேகமான முயற்சிகளை உடையவர்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.