இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் செய்வது எப்படிதேவையான பொருட்கள்

  1. இறால் -1/2 கிலோ
  2. வெங்காயம் – 2
  3. பச்சை மிளகாய் – 1
  4. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  5. கடுகு – ¼ ஸ்பூன்
  6. உளுத்தம் பருப்பு – ¼ ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  8. மிளகு தூள் – ½ ஸ்பூன்
  9. கரம் மசாலா – ¼ ஸ்பூன்
  10. கறிவேப்பிலை – சிறிதளவு
  11. கொத்தமல்லி தழை – சிறிதளவு
  12. உப்பு – தேவையான அளவு
  13. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. இறலை சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் வேக வைத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  6. பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  7. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  8. பின்னர் பொடியாக நறுக்கிய ஈரலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. மிளகு தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.
  10. கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இறால் பொடிமாஸ் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பலாப்பழ பாயாசம்

கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம் பலாப்பழத்தில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான பலாப்பழ பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பலாப்பழ சுளைகள் - தேவையான அளவு தேங்காய் பால் -...
அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...
அதிரசம் செய்முறை

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம்....
களத்திர தோஷம் பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? களத்திர தோஷத்திற்கான நிவர்த்தி / பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஒன்றுடன்...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
எண் கணிதம் எப்படி பார்ப்பது

எண் கணிதம் என்றால் என்ன? எண் கணிதத்தை பார்ப்பது எப்படி?

எண் கணிதம் நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில அந்த எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். 'எண்களை'...
கம்பு குழி பணியாரம் செய்முறை

இனிப்பு கம்பு குழி பணியாரம்

இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி  கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும்.  கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.