விருட்ச பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

விருட்ச பொருத்தம் என்றால் என்ன?

விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது. ஆண், மற்றும் பெண் இருவரில் ஒருவருக்கு பால் மரம் இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு. இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை.

இந்த பொருத்தத்தை ‘மர பொருத்தம்’ என்றும் கூறுவார்கள். இந்த விருட்ச பொருத்தம் பார்ப்பதால் ஆண், பெண் இருவருக்கும் குழந்தை செல்வம் எப்படி அமையும் என்பது கணிக்கபடுகிறது.

விருட்ச பொருத்தம் என்றால் என்ன

விருட்ச பொருத்தம் எப்படி பார்ப்பது?

இந்த பொருத்தம் பார்க்க, பெண் நட்சத்திரத்தில் உள்ள மரம் பால் உள்ளதாக அமைந்து, ஆண் நட்சத்திரம் பால் இல்லாத மரமாக அமைந்தால் குழந்தை உண்டு. ஆண் நட்சத்திரம் பால் உள்ள மரமாகவும், பெண் நட்சத்திரம் பால் இல்லாத மரமாகவும் அமைந்தால் பெண் குழந்தை இருக்காது. ஆண், பெண் இருவரின் நட்சத்திரமும் பால் மரமாக இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதி. பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திர பொருத்தம் பார்க்கப்படும். மகேந்திர பொருத்தமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராயப்படும்.

27 நட்சத்திரத்திற்குரிய விருட்சம்:

அஸ்வினி – எட்டி, பரணி – நெல்லி, கார்த்திகை – அத்தி, ரோகிணி – நாவல், மிருகசீரிடம் – கருங்காலி, திருவாதிரை – செங்கருங்காலி, புனர்பூசம் – மூங்கில், பூசம் – அரசு, ஆயில்யம் – புன்னை, மகம் – ஆலமரம், பூரம் – பலா, உத்திரம் – அலரி, அஸ்தம் – வேலம், சித்திரை – வில்வம், சுவாதி – மருதம், விசாகம் – விளா, அனுஷம் – மகிழம், கேட்டை – பிராய், மூலம் – மாமரம், பூராடம் – வஞ்சி, உத்திராடம் – பலா, திருவோணம் – எருக்கு, அவிட்டம் – வன்னி, சதயம் – கடம்பு, பூரட்டாதி – தேமா, உத்திரட்டாதி – வேம்பு, ரேவதி – இலுப்பை.

பால் உள்ள மரங்கள் மற்றும் நட்சத்திரங்கள் :

கார்த்திகை – அத்தி மரம்

ரோகிணி – நாவல் மரம்

பூசம் – அரசு மரம்

ஆயில்யம் – புன்னை மரம்

மகம் – ஆலமரம்

பூரம் – பலா மரம்

உத்திரம் – அலரி மரம்

அஸ்தம் – வேலம் மரம்

கேட்டை – பிராய் மரம்

மூலம் – மா மரம்

பூராடம் – வஞ்சி மரம்

உத்திராடம் – பலா மரம்

திருவோணம் – எருக்கு மரம்

பூரட்டாதி – தேமா மரம்

ரேவதி – இலுப்பை மரம்

பால் இல்லாத மரங்கள் மற்றும் நட்சத்திரங்கள் :

அஸ்வினி – எட்டி மரம்

பரணி – நெல்லி மரம்

மிருகசீரிடம் – கருங்காலி மரம்

திருவாதிரை – செங்கருங்காலி மரம்

புனர்பூசம் – மூங்கில் மரம்

சித்திரை – வில்வம் மரம்

சுவாதி – மருதம் மரம்

விசாகம் – விளா மரம்

அனுஷம் – மகிழம் மரம்

அவிட்டம் – வன்னி மரம்

சதயம் – கடம்பு மரம்

உத்திரட்டாதி – வேம்பு மரம்

விருட்ச பொருத்தம் இல்லாவிட்டால் செய்ய வேண்டிய பரிகாரம்

ஒருவரின் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் தென்மேற்குப் திசையில் சூரியன் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றை ஜாதகரின் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் நடுவது சிறப்பு.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்கள் ஊற வைத்த தண்ணீரை அச்செடிக்கு ஊற்றி, தண்ணீரில் ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப் போட வேண்டும். இதனால் மரக்கன்று வளர வளர நட்டவரின் வாழ்க்கை தரமும் வளரும். இதனால் மரக்கன்றை நட்டவரின் ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கும். அந்த மரக்கன்று பூத்து, காய்க்கும்போது அதை நட்டவரின் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல்...
உடல் கழிவுகள் நீங்க

உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளும் வெளியேற்றும் வழிகளும்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் அற்புத வழிகள் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்ட பின் அதன் கழிவுகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தலின் மூலம் வெளியேறி விடும். சில...
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...
கற்றாழை வளர்ப்பது எப்படி

கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை கற்றாழை ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. கற்றாழை லில்லியேசி என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக்...
நீண்ட அடர்த்தியான கூந்தலை பெற

கூந்தலை பராமரிக்க சின்ன சின்ன ஆலோசனைகள்

கூந்தல் பராமரிப்பு  பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் தான். அதிலும் நீளமான கூந்தலை உடைய பெண்கள் பார்க்க மிகவும் அழகாகவும் இருப்பார்கள். நீண்ட கூந்தலை உடைய பெண்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக...
எந்த ராசிக்கு எந்த ஓரைகள்

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்?

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்? மேஷம் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஓரைகள் மேஷ ராசிக்காரர்களுக்கு  நன்மையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஓரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து...

வசியப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

வசியப் பொருத்தம் என்றால் என்ன? வசியப் பொருத்தம் என்பது கணவன், மனைவி இருவருக்கும் வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பூரண அன்புடன், ஒருவருக்கொருவர் இன்பமுடன் வாழ்வார்களா என்பதை அறிய பார்க்கப்படும் ஒரு பொருத்தம் ஆகும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.