புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
புனர்பூசம் நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மற்றும் கடகம்
புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு
புனர்பூசம் 1 முதல் 3 பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி – மிதுனம் : புதன்
புனர்பூசம் 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி – கடகம் : சந்திரன்
புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதை : அக்னிபகவான்
புனர்பூசம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : சிவன்
புனர்பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : தேவகணம்
புனர்பூசம் நட்சத்திரத்தின் விருட்சம் : மூங்கில் : (பாலில்லா மரம் )
புனர்பூசம் நட்சத்திரத்தின் மிருகம் : பெண் பூனை
புனர்பூசம் நட்சத்திரத்தின் பட்சி : அன்னபட்சி
புனர்பூசம் நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
புனர்பூசம் நட்சத்திரத்தின் வடிவம்
புனர்பூசம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 7ம் இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘கழை’ என்ற பெயரும் உண்டு. புனர்பூசம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் வில் போன்ற வடிவத்தை கொண்டது.
புனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீ ராமர் அவதரித்தது இந்த நட்சத்திரத்தில் தான். சர்வ லட்சணங்களும் பொருந்தியவராய் இருப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த குணமுடையவர்கள். கடமை உணர்வு உடையவர்கள். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். நல்ல குணத்துடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமானவராக விளங்குவார்கள். தெய்வ பக்தி அதிகம் இருக்கும். மற்றவரை எடை போடுவதில் வல்லவர்கள். இவர்களிடம் கற்பனை சக்தி அதிகம் இருக்கும். சொந்தத்தில் சொத்துக்களும் இருக்கும். பல இடங்களில் பயணம் செய்வார்கள். தெளிவான சிந்தனை உடையவர்கள். எக்காலத்திலும் செய்நன்றியை மறக்காதவர்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமைசாலியாகவும், அமைதியான சுபாவமுடையவராகவும் இருப்பார்கள். பிறரிடம் இருந்து மதிப்பும், மரியாதையும் எளிதில் கிடைக்கும் இவர்கள் தாராள சிந்தையுடையவராக இருப்பார்கள். குழந்தைகள் முலம் மன நிறைவு பெற்று, நல்ல செல்வந்தராக விளங்குவார்கள். நகை மற்றும் ரத்தினக் கற்களில் இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும். கடுமையாகப் பேசுபவர், கள்ளத்தனம் கொண்டவர்கள். அறிவாளி, பொய் பேச மாட்டார்கள். எக்காலத்திலும் செய்நன்றியை மறக்காதவர்கள். தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு நன்மை செய்வார்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சத்தியசீலர்கள். கர்வமில்லாதவர்கள். கேள்வி ஞானம் அதிகம் உள்ளவர்கள். தரும நெறிகளை பின்பற்றுபவர்கள். இவர்களின் வாழ்க்கை கௌரவமாக காட்சியளிக்கும். நீண்ட தூரம் நடப்பவர்கள். உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும். இவர்களுக்கு மிக இளமையில் திருமணம் நடக்கும். தவறினால் மிகமிகத் தாமதமாகும். 24 வயதுக்குப் பின்னர், இவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். இவர்களை விட இவர்களின் வருங்கால சந்ததிகள் வளமோடு வாழ்வார்கள். மற்றவர்களிடம் நட்பாக பழகுவார்கள்.
இவர்கள் சிறந்த பண்பாளர்கள். பொதுத்தொண்டில் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் சிக்கனமாக இருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு பேச்சுதிறமை அதிகம் இருக்கும். எல்லாவற்றையும் வெளியில் சொல்லாமல் மனதில் பூட்டி வைத்து கொள்வார்கள். பொதுவாக நல்லதையே நினைப்பார்கள், மற்றும் நல்லதையே செய்வார்கள். இவர்கள் பொய் பேசுவதை விரும்பமாட்டார்கள். சட்ட திட்டங்களை மதித்து நடப்பார்கள். இவர்களுக்கு தன்மானம் அதிகம் இருக்கும். யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டார்கள். படிப்பறிவு, எழுத்தறிவை விட இவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.
புனர்பூசம் நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் பருமனான உடலமைப்பை பெற்றவர்கள். மந்தமான செவித்திறன் உடையவர்கள். தடித்த உரோமம் உள்ளவர்கள். இவர்கள் குடும்பத்தினர் மேல் பாசமும், அதே சமயம் கண்டிப்புடனும் நடந்து கொள்வார்கள். இவர்களை பேசி ஜெயிப்பது மிக கடினம்.
புனர்பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். உஷ்ண தேகம் உடையவர்கள். சோம்பல் குணம் உடையவர்கள். ஆசாரம் இல்லாதவர், தற்பெருமை குணம் உடையவர்கள். மேலும் சோம்பேறியாக இருப்பர். சுகமாக இருக்க விரும்புவார்கள். தன்னை போல மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். எப்பாடுபட்டாலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள்.
புனர்பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் புனர்பூச நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். குஷ்ட நோய்களை கொண்டவர்கள். பயணங்களில் விருப்பம் உள்ளவர்கள். பற்களை பேணி காக்காதவர்கள். இவர்கள் நீண்ட ஆயுளை கொண்டவர்கள். அவர்களுக்கு அலைச்சல் அதிகம் இருக்கும். இவர்கள் நல்ல புத்திசாலிகள். கடுமையான உழைப்பாளி. தெய்வ பக்தி அதிகம் இருக்கும். எப்போதும் ஒருவித மன இறுக்கத்துடன் இருப்பார்கள்.
புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் புனர்பூச நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். தீர்க்கமான பார்வை பலம் உடையவர்கள். இவர்கள் நல்ல செயல்கள் செய்வதையே குறிக்கோளாக கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலோனார் குள்ளமாகவும், நல்ல அழகுடனும் இருப்பார்கள். பார்வையால் மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.