திதிகள் என்றால் என்ன? அவை யாவை?

பஞ்சாங்கமும், திதிகளும்

நமது தினசரி வாழ்க்கையில், ஒரு நாளை துவங்கும் போதே அந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எல்லா நாட்களும் அவ்வாறு இனிய நாளாக அமைவதில்லை. ஒவ்வொரு நாளின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் தினமும் அன்றைய தினத்தின் பஞ்ச அங்கங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நவக்கிரகங்களின் ஆதார செயல்களுக்கு அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, காரணங்களே அடிப்படை ஆதாரமாக உள்ளன.

இந்த ஐந்து அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதே ‘பஞ்சாங்கம்’ ஆகும். ஆனால் எல்லோருக்கும் பஞ்சாங்கம் பார்க்க தெரியுமா என்றால் தெரியாது. இவை நம் தினசரி காலண்டரில் அன்றைய திதி, நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய திதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளின் பலன்களும் குறிப்பிடபடுகிறது.

திதிகள் என்றால் என்ன

திதி என்றால் என்ன?

திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும். அமாவாசை தினத்தன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கும். அதற்குபின் வரும் நாட்களில் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சென்று கொண்டே இருக்கும். இந்த விலகலானது தினமும் சுமார் 12 டிகிரி வரை இருக்கும். பௌர்ணமி தினத்தன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் சந்திரன் இருக்கும். அதாவது அப்போது சூரியனில் இருந்து 7-வது ராசியில் சந்திரன் இருக்கும். சூரியன் இருந்த இடத்தையும் சேர்த்து எண்ணினால் சந்திரன் நின்ற இடம் 7-வது இடமாக இருக்கும்.

அமாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள் ஆகும். அதேபோல் பௌர்ணமியில் இருந்து திரும்ப அமாவாசைக்கு வர 15 நாட்கள் ஆகும். ஆக மொத்தம் 30 நாட்கள். சந்திரன் சூரியனை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் சூரியனுடன் வந்து சேர்ந்து விடும். அந்த பதினைந்து நாட்களும் ஒவ்வொரு திதியாக குறிப்பிடபடுகிறது. அவை முறையே,

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பௌர்ணமி, அமாவாசை

ஒவ்வொரு திதியை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ள அந்த குறிப்பிட்ட திதியை க்ளிக் செய்யவும்.

வளர்பிறை, தேய்பிறை திதிகள்

சந்திரன் அமாவாசையில் இருந்து ஒவ்வொரு நாளாக சிறிது, சிறிதாக வளர்வதால் இவை எல்லாம் வளர்பிறைத் திதிகள் என அழைக்கபடுகின்றன. இந்தப் 15 நாட்களை ‘சுக்கில பக்ஷ்க்ஷம்’ என்பார்கள்.

திதிகள் மொத்தம் எத்தனை

பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்ந்து கொண்டே வரும், அதன்படி,  முதல் நாள் பெயர் பிரதமையில் இருந்து கடைசி நாளான அம்மாவாசை முடிய வரும், இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இந்த 15 நாட்களை ‘கிருஷ்ணபக்ஷ்க்ஷம்’ என்பார்கள். இவை எல்லாம் நாள், நேரம் பார்க்க உதவும்.

வளர்பிறை காலங்களில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதாக இருந்தால் அதை பஞ்சமி திதிக்குள் செய்வது சிறந்ததாகும். ஏனெனில் தேய்பிறை காலமாக இருந்தாலும் பஞ்சமி திதி வரையில் வளர்பிறை காலத்தில் என்ன பலன் கிடைக்குமே அதே போன்ற பலன் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

திதி பலன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜாதிக்காய் மருத்துவ நன்மைகள்

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

ஜாதிக்காய் வரலாறு ஜாதிக்காய் முதன் முதலில் மொலுக்கஸ் தீவுகளில் கண்டுபிடிக்கபட்டது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் ஜாதிக்காய் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல்...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சதயம் நட்சத்திரத்தின் இராசி : கும்பம் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சதயம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி சதயம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : யமன் சதயம் நட்சத்திரத்தின் பரிகார...
prawn recipe

இறால் ப்ரைட் ரைஸ்

இறால் ப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ வடித்த சாதம்  - 2 கப் ( பாஸ்மதி அரிசி ) வெங்காயம் – சிறிதளவு  ( மெல்லிதாக நறுக்கியது ) ...
ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...
சிறுநீரக கற்களை கரைக்க

சிறுநீரகத்தில் கல் வர காரணம் ? வராமல் தடுப்பது எப்படி ?

சிறுநீரகத்தில் கல் வர என்ன காரணம்? முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  சிறுநீரகம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.