துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி

துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவாதசியை சுக்கில பட்ச துவாதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவாதசி தினம் கிருஷ்ண பட்ச துவாதசி என்றும் அழைக்கபடுகிறது.

துவாதசி திதி

துவாதசி திதியின் சிறப்புகள்

கார்த்திகை மாதம் வரும் சுக்லபட்ச ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசி திதி ‘பிருந்தாவன துவாதசி’ என அழைக்கபடுகிறது. அன்று தான் மகாவிஷ்ணு துளசியை திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணத்தில் குறிபிடப்பட்டுளது. இந்த பிருந்தாவன துவாதசி திதி வரும் நாளில் எந்த பொருளை தானம் செய்தாலும் அந்த பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்தால் கொடுக்கும் பொருளின் அளவும், மதிப்பும் கூடும் என புராணம் கூறுகிறது.

துவாதசி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

துவாதசி திதியில் பிறந்தவர்கள் தர்மவானாக இருப்பார்கள். மற்றும் நல்ல செல்வந்தராகவும், நூதன தொழில் செய்பவராகவும், ஒழுக்கமான செயல்பாடுகள் கொண்டவராகவும் இருப்பார்கள். வசீகரிக்கும் தோற்றம் கொண்ட இவர்கள் எதிர்ப்புகளை கொண்டவர்கள். நல்ல குணம் கொண்டவர்கள், வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டவர்கள், எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள். எல்லோரும் செய்யும் தொழிலை செய்யாமல் புதுமையான தொழில் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். துவாதசி திதி அன்று பிறந்தவர்கள் கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபட்டு வருவது சிறந்த பரிகாரமாக அமையும்.

துவாதசி திதியில் என்னென்ன செய்யலாம்

துவாதசி திதி மஹாவிஷ்ணுவிற்க்கு உரியதாகும். துவாதசி திதி வரும் நாளில் விளக்கு ஏற்றுதல், மதவிழாக்கள் செய்தல், திருப்பணிகள் செய்தல் நல்ல பலனைத் தரும். இந்நாளில் மதச்சடங்குகளில் ஈடுபடலாம். தெய்வீக காரியங்கள் மேற்கொள்ளலாம்.

துவாதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

துவாதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மகரம் மற்றும் துலாம் ஆகும்.

துவாதசி திதிக்கான தெய்வங்கள்

துவாதசி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : மஹா விஷ்ணு

துவாதசி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : மஹா விஷ்ணு, மற்றும் சுக்கிரன்

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
தந்துரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் தொடை பகுதி – 4 தயிர் - ஒரு கப் ...
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...
பெண் உடல் மச்ச பலன்கள்

பெண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் உடல் மச்ச பலன்கள் மச்சம் ஒருவரின் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று கூறுவார்கள். பெண்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று மச்ச சாஸ்திரம் என்னும் நூல் கூறுகிறது....

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு-ன் மருத்துவ பயன்கள்

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு சதாவரி என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம் ஆகும். இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை வடமொழியில் சதாவரி...
அறுபதாம் கல்யாணம் எப்படி செய்வது

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்  கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்த பூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று...
ரவா லட்டு செய்முறை

சுவையான ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - ½ கிலோ சர்க்கரை – ¼ கிலோ முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – சிறிதளவு ஏலக்காய் தூள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.