யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள்

யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு பலனையும் தரலாம். பெரிய அதிகாரி முதல், பிச்சைக்காரர் வரை யோகங்களால் தான் அந்த நிலையை அடைய முடியும். அந்த வகையில் பலவிதமான யோகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும். நாம் இந்த பகுதியில் ஒரு சில யோகங்களையும் அதனால் உண்டாகும் பலன்களையும் பார்ப்போம்.

ஜோதிடத்தில் யோகங்கள்

 

அதியோகம் (Athi Yogam)

குரு, புதன், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள், சந்திரனுக்கு 6, 7, 8 -ம் வீடுகளில் இருந்தால் அதற்கு அதியோகம் என்று பெயர். இந்த மூன்று கிரகங்களும் ஏதாவது ஒரு வீட்டில் இருக்கலாம், அல்லது இரண்டு மற்றும் மூன்றாம் வீடுகளில் இருக்கலாம். மூன்று கிரகங்கள் இல்லாவிட்டாலும் ஏதாவது இரண்டு கிரகங்களாவது இருந்தாலும் அதுவும் அதியோகம்தான்.

அதியோகத்தின் பலன்கள்

அதியோகம் அமையபெற்ற ஜாதகர் மிகவும் மகிழ்ச்சயான வாழ்க்கை வாழ்வர். நீண்ட ஆயுளுடன், தன்னை எதிர்த்தவர்களை வென்று நல் வாழ்க்கையை வாழ்வவார்கள். மேலும் நாணயம் மிக்கவர், நேர்மையானவர். சுகயோகங்களை அனுபவிப்பவர். அறிஞர்களால் பாராட்டபடுவார்கள்.

அமல யோகம் (Amala Yogam)

லக்கினத்திலோ அல்லது சந்திரனுக்கு 10ம் வீட்டில் சுபர்களான குரு, சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகங்களில் எதாவது ஒரு சுபகிரகமிருந்தால் அதற்கு அமல யோகம் என்று பெயர்.

அமலயோகத்தின் பலன்கள்

அமல யோகம் அமையபெற்றவர்களுக்கு நல்ல பெயரும், புகழுலும் கொண்ட வாழ்க்கை அமையும். இவர்கள் அன்பும் ஆற்றலும் பெற்றவர்கள், வற்றாத புகழும் அழியாத செல்வமும் கொண்டவர்கள். நல்லவர். வல்லவர் என எல்லோராலும் புகழப்படுபவர். கலை சினிமா, அரசியல் துறைகளில் புகழ் பெற்று விளங்குவார்கள்.

கர்மாதிபதி யோகம் (Karmathipathi Yogam)

9-ம் வீட்டின் அதிபதியும், 10-ம் வீட்டின் அதிபதியும் சேர்ந்து இருந்தால் அதற்கு தர்ம – கர்மாதிபதி யோகம் என்று பெயர். 9-ம் வீட்டிற்கு தர்ம ஸ்தானமென்றும், 10- ம் வீடிற்கு கர்ம ஸ்தானம் என்றும் பெயர். ஒருவருகொருவர் 7 ம் பார்வை பார்த்துகொண்டாலும் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. ஆகையால்தான் அதற்கு தர்ம – கர்மாதிபதி யோக மென்று பெயர்.

கர்மாதிபதி யோகத்தின் பலன்கள்

இந்த கர்மாதிபதி யோகம் அமையபெற்றவரகளுக்கு நல் வாழ்க்கை அமையும். அபரிமிதமான பொருள் சேர்கை அனைவர்க்கும் வழிகாட்டும் தலைமை / உயர்ந்த பதவி அனைத்தும் கிடைக்கும்.

சகட யோகம் (Sagada Yogam)

குருவிற்கு 6,8,12 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தால் சகட யோகம் உண்டாகிறது.

சகட யோகத்தின் பலன்கள்

சகட யோகம் கொண்டவர்கள் வறுமையில் வாழ்வார்கள். வளமிழந்து தவிப்பார். வாழ்வில் உயர்வு பெற இயலாது. வாழ்வில் ஏற்ற தாழ்வால் துன்பபடுவார். புத்திர தோஷம் உண்டாகிறது. புத்திரர்களால் மூலம் நற்பலன் இல்லை. இந்த மாதிரி அமைப்புடையவர் அதிர்ஷ்டமில்லாதவர். கஷ்ட ஜீவனமுள்ளவர், மிகவும் பிடிவாத குணமுள்ளவர், அதனால் பலராலும் வெறுக்கப்படுபவார்கள்.

சந்திர மங்கள யோகம் (Chandhira Mangala Yogam)

ஜாதகத்தில் செவ்வாயும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் இந்த சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. மேலும் சந்திரனுக்கு 4,7,10 ல் செவ்வாய் இருப்பின் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.

சந்திர மங்கள யோகத்தின் பலன்கள்

இந்த யோகம் கொண்டவர்கள் முறையற்ற காரியங்கள் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். தன் தாயரைக் கடின சொற்கள் மூலம் கடிந்து கொள்வர். அதேபோல் செவ்வாயும் சந்திரனும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டாலும் இந்த யோகம் உண்டாகிறது. இவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். இந்த யோகம் உடையவர் செல்வந்தராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குகின்றனர்.

யோகங்கள் என்றால் என்ன

 

 

சரஸ்வதி யோகம் (Saraswathi Yogam)

குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் 1, 2, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளில் தனித்தோ சேர்ந்தோ இருந்தால், குருவுக்கு அந்த வீடு சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ அல்லது நட்பு வீடாகவோ இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு சரஸ்வதி யோகம் என்று பெயர்.

சரஸ்வதி யோகத்தின் பலன்கள்

சரஸ்வதி யோகம் கொண்டவர்களுக்கு சரஸ்வதி தேவியின் அருள் நிறைந்து காணப்படும். மேலும் இவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். மேலும் நல்ல பிள்ளைகளும் பெற்றிடுவார்கள்.

உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இறந்தவர்கள் பற்றிய கனவு

இறந்தவர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

இறந்தவர்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒருவர் திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள். அலறுவதர்கான காரணம் கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், இறந்தவர்கள் கனவில் வந்தார்கள்...
திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் புகுந்த வீட்டில் முதலில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்? திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதை போகிறபோக்கில் சாதரணமாக சொல்லிவிடவில்லை, அதற்கு பொருள் நிறைந்த ஆர்த்தம் உள்ளது. உதாரணத்திற்கு நெல், சோளம், பருப்பு...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
சிக்கன் சுக்கா செய்யும் முறை

சிக்கன் சுக்கா வறுவல் செய்வது இவ்வளவு சுலபமா

சிக்கன் சுக்கா வறுவல் சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல்,...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...
உடலை வலுப்படுத்தும் உணவுகள்

உடலை வலுப்படுத்தும் உணவுகள்

உடலை வலுப்படுத்தும் உணவுகள் என்னென்ன? உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்தால் தான் நம் தோற்றம் அழகாகவும் உடல் உறுதியாகவும் ,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.