அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி
அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்
அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன்
அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன்
அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : பெருமாள்
அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திரகணம் : தேவகணம்
அஸ்தம் நட்சத்திரத்தின் விருட்சம் : வேலமரம்
அஸ்தம் நட்சத்திரத்தின் மிருகம் : பெண் எருமை
அஸ்தம் நட்சத்திரத்தின் பட்சி : பருந்து
அஸ்தம் நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்

அஸ்தம் நட்சத்திரத்தின் வடிவம்

அஸ்தம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 13வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘அத்தம்’ என்ற பெயரும் உண்டு. அஸ்தம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் உள்ளங்கை போன்ற வடிவத்தில் காணப்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள். சுறுசுறுப்பான செயல்களால் எண்ணிய செயலை முடிப்பீர்கள். அழகான முகமும் வசீகரமான உடலமைப்பும் இருக்கும். சேமிப்பில் விருப்பம் உடையவர்கள். சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்கள். மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சாமர்த்தியசாலிகள். கல்வியில் விருப்பம் கொண்டவர்கள். மனத்திற்கு பிடித்தால் மட்டும் தான் எதையும் செய்வார்கள். யாருக்கும் அடிமை வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்காது. யாருக்கும் கீழ்ப்படிந்து நடப்பது இவர்களுக்கு பிடிக்காது. அதனால் சுயதொழிலில்தான் பிரகாசிப்பார்கள்.

இவர்கள் மிகுந்த விவேகமாகவும், தாராள மனம் கொண்டவராகவும், செல்வந்தராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் இருப்பார்கள். இவர்கள் அமைதியானவர்கள், ஆனால் ஆடம்பரப் பிரியர்கள். எப்படிப்பட்ட குணாதிசயம் பெற்றவர்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். இவர்கள் நகைச்சுவையுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். எளிதில் உணர்ச்சி வசபடக்கூடியவர்கள். இவர்களாக யாருக்கும் துன்பம் தர மாட்டார்கள். மீறி யாராவது இவர்களுக்கு துன்பம் தந்தால் அவர்களை பழிவாங்காமல் விடமாட்டார்கள். குறைவாக சாப்பிடுபவர்கள். அழகான உடல் அமைப்பை கொண்டவர்கள். எடுத்த செயலை முடிப்பதில் புத்திசாலிகள். குருபக்தி கொண்டவர்கள்.

ஆடை மற்றும் ஆபரணங்கள் மீது விருப்பம் உடையவர்கள். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளை ரசிப்பதில் வல்லவர்கள். எளிதில் பழகும் இயல்புடையவர்கள். தாயாரின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் போலில்லாமல் உயர்வு தாழ்வை சந்திப்பார்கள். ஒரு சமயம் முதலிடத்தில் இருக்கும் இவர்கள் அடுத்து என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் கீழே விழுந்து விடுவார்கள். மறுபடியும் மேலே போவார்கள். அதனால் நிரந்தர ஏழையாகவும் இல்லாமல், நிரந்தர பணக்காரராகவும் இல்லாமல் இருப்பார்கள்.

இவர்கள் உதவி செய்ய கூடிய மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு வெகுளியான குணமிருக்கும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பார்கள். இயற்கையை ரசிக்கும் குணமிருக்கும். தாய், தந்தை சொல்லை மதித்து நடப்பார்கள். எப்பொழுதும் தேனீக்களை போல சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்களுக்கு நிர்வாக திறமை இயல்பாகவே இருக்கும். மனம் விரும்பாத காரியத்தை செய்ய மாட்டார்கள், இவர்களிடம் தன்னம்பிகை அதிகமாக இருக்கும். பொறுமையாக இருந்து காரியங்கள் சாதிப்பதில் வல்லவர்கள்.

அஸ்தம் நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். பசுக்கள் மீது பிரியமுள்ளவர்கள். நேர்மையானவர்கள்.. எளிமையான தோற்றம் உடையவர்கள். இலட்சியத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். இவர்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்கள். வீண் பந்தா செய்ய மாட்டார்கள். பொய் பேசுவதை விரும்ப மாட்டார்கள். பொதுவாக நல்லவர்கள்.

அஸ்தம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நடனத்தில் விருப்பமுள்ளவர்கள். சுக போகங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். விரைவாக பேசும் ஆற்றல் கொண்டவர்கள். உலக நியதிகளுக்கு கட்டுபட்டு வாழக்கூடியவர்கள். இவர்கள் கவர்ச்சியாக இருப்பதை விரும்புவார்கள். கேளிக்கைகளில் விருப்பம் உள்ளவர்கள். இவர்கள் பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள்.

அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இறை பக்தி கொண்டவர்கள். நல்லகுணமும் உடையவர்கள். அறிவு வேட்கை கொண்டவர்கள். நிதானமான பேச்சுத்திறமை உடையவர்கள். தொழில் வல்லமை உடையவர்கள். கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் நேர்மையான குணத்தை கொண்டவர்கள். எதாவது புதிதாக காற்று கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள். பேச்சு திறமை அதிகம் இருக்கும். கலைகளில் ஈடுபாடு அதிகம்.

அஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இனிய குரலை உடையவர்கள். தாயை பேணி காப்பவர்கள். விட்டுக்கொடுத்து வாழக்கூடியவர்கள். இவர்கள் மனம் என்ன சொல்கிறதே அதன்படி வாழ விரும்புவார்கள். ஆசா, பாசம் அதிகம் உள்ளவர்கள். இவர்கள் நல்ல உயரமானவராக இருப்பார்கள். எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதை விரும்புவர். இவர்களுக்கு தலைமை தாங்கும் பண்பு உண்டு.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பெண் கால் மச்ச பலன்கள்

பெண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கால் மச்ச பலன்கள் சாமுத்திரிக லட்சனப்படி ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்ட இடங்களில் மச்சம் இருந்தால் அவருக்கு என்ன பலன்கள் உண்டாகும் என குறிப்பிடப்பட்டிற்கிறது. அந்த வகையில் இந்த பகுதியில் பெண் பாதம், மூட்டு,...
காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம்...
மிதுன ராசி

மிதுன ராசி பொது பலன்கள் – மிதுன ராசி குணங்கள்

மிதுன ராசி குணங்கள் மிதுன ராசியின் அதிபதி புதன் பகவனாவார். மிதுன ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரம் 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்கள் 1, 2, 3 ஆம் பாதங்கள் ஆகியவை...
கண்களை குளிர்ச்சியாக்கும் வெள்ளரிக்காய்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால், அடிக்கடி கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக, சிறு வயது முதலே...
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள்

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள் சரும அழகை மேம்படுத்த நாம் செய்யும் சில விஷயங்கள் சருமத்திற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் சரும நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. இரவில் தயிருடன் சிறிதளவு...

வசியப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

வசியப் பொருத்தம் என்றால் என்ன? வசியப் பொருத்தம் என்பது கணவன், மனைவி இருவருக்கும் வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பூரண அன்புடன், ஒருவருக்கொருவர் இன்பமுடன் வாழ்வார்களா என்பதை அறிய பார்க்கப்படும் ஒரு பொருத்தம் ஆகும்....
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.