உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : மீனம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : சனி
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை- : காமதேனு
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : துர்க்கை
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : மனுஷ கணம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் விருட்சம் : வேம்பு
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மிருகம் : பசு
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பட்சி : கோட்டான்
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் வடிவம்
உத்திரட்டாதி நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 26வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘முரசு’ என்ற பெயரும் உண்டு. உத்திரட்டாதி நட்சத்திரம் வான் மண்டலத்தில் ‘கட்டில்கால்’ வடிவத்தில் காணப்படும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த கொண்ட செயலை முழுமையாக செய்து முடிக்கக்கூடியவர்கள். இவர்கள் மகிழ்ச்சி நிறைந்தவராகவும், நற்குணமும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும் விளங்குவார்கள். செயல் தீரம் கொண்டவர்கள். ஆரோக்கிய சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடியவர்கள். பிறரிடம் நேர்மையையும், உண்மையையும் எதிர்பார்க்கக்கூடியவர்கள். இவர்கள் தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் இருப்பார்கள்.
இவர்கள் பழகுவதில் பாகுபாடு பார்க்க மாட்டார்கள். ஏழையோ, பணக்காரனோ அனைவரையும் சமமாக நினைப்பார்கள். ஒரு செயலை துவங்கி விட்டால் அதை முடிக்கும் வரை விடமாட்டார்கள். யார் மீதாவது அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். இவர்கள் பொதுவாக அமைதியாக காட்சியளிக்க கூடியவர்கள். ஆனால் கோபம் வந்தால் முரட்டுதனம் இவர்களின் நடவடிக்கையில் வெளிப்படும். எளிதில் உணர்ச்சி வசப்படுவது இவர்களின் குறையாகும். இவர்களை புண்படுத்தினாலோ, சிறுமைப்படுத்தினாலோ பொறுத்து கொள்ள மாட்டார்கள். சிங்கம் போல் சீறுவார்கள்.
பள்ளிப் படிப்பு குறைவாக இருந்தாலும் அனுபவ படிப்பு அதிகம். கற்றவர்களைக் கவரும் விதத்தில் இவர்கள் செய்கை இருக்கும். இவர்கள் வாழ்க்கை திருப்பமே திருமணத்திற்கு பிறகுதான் வருகிறது. இவர்களின் பேச்சில் அனல் தெறிக்கும். எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என நினைப்பவர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். கல்வி ஞானத்தில் சிறந்தவர்கள். குடும்ப தொழிலை விரும்பி செய்வார்கள். வழக்கை வாதாடுவதில் வல்லவர்கள். எதையாவது கற்று கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
இவர்களுக்கு நடிக்க தெரியாது. போலியான வாழ்க்கை வாழபிடிக்காது. யாரிடமும் உதவி என்று கேட்டு கைகட்டி நிற்க மாட்டார்கள். பிடிவாத குணமும், பேச்சில் வேகமும், விவேகமும் நிறைந்தவர்கள். இவர்களுக்கு கவர்ச்சிகரமான, வசீகரமான உடற்கட்டு இருக்கும். ஒரே சமயத்தில் பல விஷயங்களில் ஞானத்தையும், அறிவையும் இவர்களால் பெற முடியும். எதிலும் ஆழமாக யோசித்து செயல்படுவார்கள். எதிலும் நடு நிலைமை வகிப்பார்கள். கடின உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைவார்கள். சுகமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.
வாக்கு கொடுத்தால் அதை எப்படியாவது முடித்து காட்டுவார்கள். புறம் பேசும் குணம் கொண்டவர்கள். பிறருக்கு உதவக்கூடியவர்கள். கலைகளில் விருப்பம் கொண்டவர்கள். பயணங்களில் விருப்பம் உடையவர்கள். வாய்சொல்லில் வீரம் இல்லாமல் செயலில். நீதி, நேர்மைக்கு அஞ்சி வாழ்வார்கள். அதிகமான உறவினர்களை உடையவர்கள். நேர்மையால் மிகுந்த செல்வாக்கு உடையவர்கள். இவர்கள் களங்கம் இல்லாத மனம், பிறருக்கு துன்பத்தை தராத குணம் உள்ளவர்கள். இவர்கள் களங்கம் இல்லாத மனம், பிறருக்கு துன்பத்தை தராத குணம் உள்ளவர்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். திடமான மன தைரியத்தை கொண்டவர்கள். எளிதில் முடிவை மாற்றக்கூடியவர்கள். தான, தர்மங்கள் செய்வதில் விருப்பமுள்ளவர்கள். உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருக்கும். செல்வாக்கு நிறைந்தவர்கள். பேச்சுகளால் மற்றவர்களை கவரக்கூடியவர்கள். இவர்கள் முன் கோபம் உடையவர்கள். இவர்கள் மனம் அடிக்கடி சஞ்சலமடையும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் முன் கோபம் உடையவர்கள். பார்ப்பதற்கு சாதுவாக காட்சியளிப்பர்கள். நல்ல குணம், மற்றும் நடத்தையுள்ளவர். ஆடம்பர பொருள்கள் மீது விருப்பம் உடையவர்கள். எல்லா நேரத்திலும் சந்தோஷமாக இருப்பதையே விரும்புவார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். உறுதியான தேகத்தை உடையவர்கள். கடவுள் பக்தி நிறைந்தவராக இருப்பார்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். தன்னை போலவே மாற்றவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். கற்பனையில் மன்னன். இவர்கள் நீதிமான்களாக இருப்பார்கள். எதிலும் நாட்டம் இல்லாதவர்கள். குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள். எந்த காரியத்தையும் முழுமையாக செய்ய வேண்டும் என்னும் விருப்பமுடையவர்கள். விவசாய பணியில் ஆர்வம் உடையவர்கள். திடமான எண்ணம் கொண்டவராக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்வார்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.