ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள். ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தங்கள் தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது அதிக நாட்டம் இருக்கும்.

ஆடியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களை, யாராவது கடிந்து கொண்டால் அதை மனதில் வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் அதற்கு பதிலடி கொடுப்பார்கள். இவர்களுக்கு ஆபார ஞாபக சக்தி இருக்கும். இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் விரைவில் நட்பு ஏற்படுத்தி கொள்வார்கள். அதே நேரம் அவர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். அதனால் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்களிடம் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேச வேண்டும். ஏனெனில் இவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள். அதேசமயம் இவர்கள் எளிதில் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என தெரிந்தால் அதில் எளிதில் அகப்பட்டு கொள்ளாமல் நழுவி ஒதுங்கிக் கொள்வார்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதவாறு இவர்கள் எதையும் திட்டமிட்டுச் அந்த செயலை செய்வார்கள். சொந்த, பந்தங்கள் சிலருடன் இவர்களுக்கு ஒத்துபோகாது. அவர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்கள் மூலம் பிரச்னைகள் வரும் வாய்ப்பு குறைவு.

இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் முந்தைய  தலைவர்களின் புகழை பாடியே நிறைய பணம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலில் தீவிரமாக இறங்கினால், இவர்கள் எளிதில் அதில் வெற்றி பெறுவார்கள். அதேநேரம் சோம்பேறியாக இருந்தால் இவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆடி மாதத்தில் பிறந்த பெண்களிடம் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.

இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். கடிந்து பேசினாலும், தூற்றினாலும், வசை பாடினாலும் எதற்கும் உடனுக்குடன், நேரடியாக பதிலளிக்க மாட்டார்கள். பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். சில சமயங்களில் பிடிவாத குணம் காரணமாக சொந்தபந்தங்கள், நண்பர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். அடிக்கடி தங்கள் குணத்தையும், முடிவுகளையும் மாற்றிக் கொள்வார்கள். சந்தேகம் இவர்களின் உடன்பிறந்த ஒன்றாகும். பிடிவாதம் கொண்டவர்கள். சுவையான, சத்தான உணவுகளை விரும்பி உண்பார்கள். தங்கள் ஒரு விஷயத்தில் லாபம் அடைவதாக இருந்தால் அதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...
இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...
கறிவேப்பிலை நன்மைகள்

கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை கறிவேப்பிலை கறியில் போடப்படும் இலை என்பதாலும், அந்த கறிவேப்பிலை இலை அமைப்பு வேப்பிலையின் அமைப்பு போன்றே இருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றது. கறிவேப்பிலை பல்வேறு...
பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு – 1 கப் சர்க்கரை – ¾ கப் நெய் – ¼ கப் தண்ணீர் – சிரிதளவு செய்முறை பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி...
இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன் அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.