கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை

கறிவேப்பிலை கறியில் போடப்படும் இலை என்பதாலும், அந்த கறிவேப்பிலை இலை அமைப்பு வேப்பிலையின் அமைப்பு போன்றே இருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றது.

கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட தாவரம் ஆகும். கறிவேப்பிலை மரத்தின் இலை, பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருத்துவ பயன் கொண்டதாகும். கறிவேப்பிலை வாசனைப் பொருளாக மட்டும் இல்லாமல், நாம் சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதற்கு காரணம் கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் சக்தி கொண்ட இலையாகும்.

கறிவேப்பிலை நன்மைகள்

கறுவேப்பிலையின் தோற்றம்

வேப்பிலை போன்று இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ.மீ நீளம், மற்றும் 1-2 செ.மீ அகலம் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாக இருக்கும். ஒவ்வொரு கொத்திலும் 10 முதல் 20 இலைகள் வரை இருக்கும். இது மர வகையை சேர்ந்தது ஆகும். “கறிவேப்பிலை மரம்” அல்லது “கறுவேம்பு மரம்” என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ இல்லாமல் 4 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரும்.

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்

கறிவேப்பிலையில் வைட்டமின் “ஏ’, வைட்டமின் “பி’, வைட்டமின் “பி2′, வைட்டமின் “சி’, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.

கறிவேப்பிலையின் வேறு பெயர்கள்

கறிவேப்பிலையானது கறியபிலை, கறிவேம்பு, கறிப்பில்லை என பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

கறிவேப்பிலை வகைகள்

கறிவேப்பிலை இருவகைப்படும் அவை, “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலையானது உணவிலும், காட்டுக் கறிவேப்பிலை மருந்து தயாரிப்பிலும் பயன்படுகிறது.

கறிவேப்பிலை மருத்துவப் பயன்கள்

இளநரை வராமல் தடுக்கும்

நாம் சாப்பிடும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலையை சேர்த்தால் கண் பார்வை தெளிவு பெறும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ இருப்பதால் முடி நன்றாக வளரும். இளநரை ஏற்படாமல் தடுக்கும்.

கொழுப்புகள் கரையும்

காலை வேளையில் வெறும் வயிற்றில், 20 கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடுப்பை பெறலாம்.

அஜீரணத்தை போக்கும்

ஒரு சொம்பு தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் எந்த வகையான அஜீரணம் இருந்தாலும் குணமாகும். வாயுப் பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாற்றினைப் பருக வாயுப்பிரச்சினை மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும்.

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்

ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், காலை வேளையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை பிரச்சனை தீரும்.

நச்சுக்களை வெளியேற்றும்

ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி வெளியேறிவிடும். மேலும் கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு நிறைந்த நச்சுக்கள் வெளியேறும்.

இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

கறிவேப்பிலை இளம் துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர பேதி, சீதபேதி போன்றவை குணமாகும். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலை வேளையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீரடையும்.

கெட்ட கொழுப்புக்களை வெளியேற்றும்

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றுவதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையிலிருந்து உடலை பாதுகாக்கும்.

பசியை தூண்டும்

கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்த பிரச்சனை நீங்கி பசி அதிகரிக்கும்.

இன்சுலினை சுரக்க செய்யும்

கறிவேப்பிலைப் பொடி, நெல்லிப் பொடி, மஞ்சள் பொடி மூன்றையும் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் கணையச் செயல்பாட்டைத் தூண்டும். இதன் மூலம் உடலில் இன்சுலின் தேவையான அளவு சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை வியாதியின் தாக்கம் விரைவில் குறையும்.

கண்ணில் புரை ஏற்படுவதை தடுக்கும்

கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி நீங்கும்.

மந்தத்தை போக்கும்

அசைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் மந்த பிரச்சனைக்கு இஞ்சி, கறிவேப்பிலை அரைத்து கலக்கிய மோர் சாப்பிட உடனே நிவாரணம் கிடைக்கும்.

கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்

முடி கருகருவென வளரும்

கறிவேப்பிலை போட்டு காய்ச்சிய எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் முடி பளபளபாகும். அத்துடன் கருப்பு நிறத்தில் கருகருவென வளரும். முதுமை தள்ளி போகும்.

மலசிக்கல் தீரும்

நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை போட்டுப் பொடியாக்கி அதனை சோற்றில் போட்டு நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் மந்த பேதி, மலச்சிக்கல் மலக்கட்டு போன்றவை குணமாகும்.

பற்கள் ஈறுகள் வலிமையாகும்

கறிவேப்பிலை குச்சியைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் எந்த கரைகளும் இல்லாமல் பளிச்சென மாறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நட்சத்திர கணங்கள்

நட்சத்திர கணங்கள் மற்றும் அவற்றின் பண்புகள்

நட்சத்திர கணங்கள் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளன. 27 நட்சத்திரங்களுக்கு உண்டான கணங்கள் பற்றிய சில பொதுவான விஷயங்கள் குறித்து இப்பகுதியில் சற்று விரிவாக பார்ப்போம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம்...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி திருவோணம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : விஷ்ணு திருவோணம் நட்சத்திரத்தின் பரிகார...
how to make aval payasam in tamil

அவல் பாயாசம் செய்வது எப்படி ?

அவல் பாயாசம் தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – ½ கப் பால் - 2 கப் ஏலக்காய் தூள்  - சிறிதளவு முந்திரிப்பருப்பு – தேவையான அளவு நெய்...
அறுபதாம் கல்யாணம் எப்படி செய்வது

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்  கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்த பூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று...
மாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக மனபான்மை உள்ளவர்கள். குடும்பத்திலும், சொந்த பந்தங்களிடத்திலும் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். காரியங்களை திட்டம் போட்டு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.