பலவித மருத்துவ பயன்கள் கொண்ட பருப்பு கீரை

பருப்பு கீரை

இந்த கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்ற பெயர் ஏற்பட்டது. பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ என்றும் அழைக்கபடுகிறது. பருப்பு கீரை பிள்ளை பெற்ற பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது. ரத்தத்தை சுத்தமாக்கும் இது நீண்ட காலமாக இருந்து வரும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியது.

பருப்பு கீரை பயன்கள்

பருப்பு கீரையில் உள்ள சத்துக்கள்

ஆற்றல் – 27 கிலோ கலோரிகள், ஈரப்பதம் – 90 கிராம், புரதம் – 2 கிராம், கொழுப்பு – 1 கிராம், தாதுச்சத்து – 2 கிராம், நார்ச்சத்து – 1 கிராம், கார்போஹைட்ரேட் – 3 கிராம், கால்சியம் – 111 மி.கி., பாஸ்பரஸ் – 45 மி.கி., இரும்புச்சத்து – 15 மி.கி.

பருப்பு கீரையின் மருத்துவ பயன்கள்

உடல் உஷ்ணம் குறையும்

பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அது உடலில் உல்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். தொடர்ந்து பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல் ஏற்படாது.

கொப்பளங்கள் மறையும்

கொப்பளங்கள் ஏற்பட்ட இடங்களில் பருப்புக் கீரையை நன்கு அரைத்து மேல் பூச்சாகத் தடவி வந்தால், வேர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காய கொப்பளங்கள் கொப்பளங்கள் மறைந்து உடல் குளிர்ச்சியாகும்.

எலும்புகள் வலுவடையும்

பருப்பு கீரையில் ஒமேகா 3 என்னும் சத்து அதிகம் உள்ளது. மேலும் கால்சியம் சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும்.

மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்

பருப்பு கீரையில் உள்ள மிகுதியான நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இக்கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து இளநீரில் போட்டு பருகினால் சீதபேதி நிற்கும். வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போகும்.

தலைவலியை குறைக்கும்

தலைவலி உள்ளவர்கள் பருப்புக் கீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்று போட்டு வந்தால் தலைவலி தீரும். மேலும் இரைப்பையில் அதிகமாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சலை போக்குகிறது.

வெப்ப நோய்களை தடுக்கும்

வெயில் காலம் வந்தாலே மிகுதியான வெப்பம் காரணமாக ஒரு சில நோய்கள் தோன்றும். இதை குறைக்க பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு நீர்க்கடுப்பு வியர்க்குரு வேனல்கட்டிகள் போன்றவை ஏற்படுவது தவிர்க்கப்படும்.

யாரெல்லாம் பருப்பு கீரை சாப்பிடக்கூடாது

பருப்புக் கீரையில் உள்ள ஆக்சாலிக் என்னும் அமிலம் சீறுநீரகத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாகிறது. எனவே சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பருப்புக் கீரையைத் சாப்பிடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இறந்தவர்கள் பற்றிய கனவு

இறந்தவர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

இறந்தவர்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒருவர் திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள். அலறுவதர்கான காரணம் கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், இறந்தவர்கள் கனவில் வந்தார்கள்...
பல்வேறு திருமண சடங்குகள்

பல்வேறு விதமான திருமண சடங்குகள்

திருமண சடங்குகள் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இரு மனங்கள் இணைவது திருமணமாகும். திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் அத்தியாவசியமான ஒன்றாகும். திருமணம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...
சருமம் அழகாக

உங்கள் சருமம் பால் போன்று வெண்மையாக வேண்டுமா?

சருமத்தை வெண்மையாக மாற்றும் பால் பால் நம் தினசரி வாழக்கையில் இடம்பெரும் ஒரு முக்கிய பொருளாகும். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். பாலில்...
ஏகாதசி திதி

ஏகாதசி திதி பலன்கள், ஏகாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

ஏகாதசி திதி ஏகாதசி என்ற வார்த்தையை ஏகம் – தசம் என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று, தசம் என்பது பத்து என்று அர்த்தம். இரண்டையும் கூட்டினால் 11. இது திதிகளின்...
ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? ராசி அதிபதி பொருத்தம் என்பது குடும்பம் சந்தோஷமாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் ஆகும். ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். பிறக்கும் பிள்ளைகள் யோகமாக...
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.