தான்றிக்காய் மருத்துவ குணங்கள்

தான்றிக்காய்

தான்றி என்பது ஒரு மர இனமாகும். இது மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்கிறது. மார்ச் முதல் மே வரையிலான கால கட்டத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். பின்னர் உருண்டை வடிவிலான ஐந்து பள்ளங்களைக் கொண்ட காய்கள் தோன்றும். பின்பு அது சாம்பல் நிற பழங்களாக மாறிவிடும். இப்பழம் மூலத்தைக் குணமாக்கும். சளி, வயிற்றுப்போக்கு முதலானவற்றை  கட்டுப்படுத்தும்.

தான்றிக்காய் பயன்கள்

தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்பும் கொண்ட சுவை கொண்டது. செரிமானத்தின் போது இனிப்பு சுவை கொண்டதாக மாறும். உஷ்ண குணம் கொண்டது. தொடும்போது குளிர்ச்சியாக இருக்கும். கப பித்தங்களை தணிக்கும், மலத்தை வெளியேற்றும், கண்களுக்கு இதம் அளிக்கும், மற்றும் தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதன் விதைகளில் உள்ள பருப்பு மயக்கத்தை உண்டாக்கும். இதன் காயில் 17% டேனின் உள்ளது. இதில் 25 % மஞ்சள் நிறமுள்ள எண்ணெய், மேலும் மாவுப் பொருள், சைபோனின் போன்றவை உள்ளன.

தான்றிக்காயின் வணிக பயன்கள்

தான்றிக்காயின் மரக்கட்டைகள் ஈரத்தைத் தாங்கக்கூடிய தன்மை கொண்டவை. இது படகுகள், வேளாண் கருவிகள் செய்யப் பயன்படுகின்றன. இந்த மரத்தின் பட்டைகள் துணிகள் மற்றும் தோல் பொருட்களுக்கு சாயமேற்றப் பயன்படுகிறது.

தான்றிக்காயின் வேறு பெயர்கள்

தான்றிக்காய்க்கு அமுதம், அக்காத்தான், அம்பலத்தி, ஆராமம், எரிகட்பலம், கந்துகன், அக்ஷம், அக்கந்தம்,கலித்துருமம், சதகம், தாபமாரி, வாந்தியம், வித்தியம், விபீதகம், கந்தகட்பலம், தானிக்காய் போன்ற பல பெயர்கள் உள்ளன. காய், கனி, இலை, விதை என இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவ பயன்பாடு கொண்டவை.

தான்றிக்காயின் மருத்துவப் பயன்கள்

காயகல்பம்

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் போன்றவை சேர்ந்தது தான் திரிபலா சூரணமாகும். தான்றிக்காய் திரிபலா சூரணத்தில் ஒன்றாகும். திரிபலா சூரண கலவையை தொடர்ந்து 48 நாட்ள் எடுத்துக்கொண்டால் உடல் இரும்பு போல உறுதியாகி நோயில்லா நீண்ட வாழ்வை அளிக்கும்.

தொண்டை பிரச்சனைகளை தீர்க்கும்

தான்றிக்காயானது தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.

வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும்

வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை போக்க தான்றிக்காயின் பழங்கள் உதவுகிறது.

மாரடைப்பை தடுக்கும்

தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு விரைவில் குணமாகும். மேலும் பல்வலி, சிலந்தி கடியால் ஏற்பட்ட நஞ்சு, இரைப்பு பிரச்சனைகள் நீங்கி உடல் வலிமை பெற உதவுகிறது.

உடலை உறுதியாக்கும்

தான்றிக்காய், நிலப்பனைகிழங்கு, பூனைக்காலி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மைய அரைத்து, அதில் ஐந்து கிராம் அளவு எடுத்து காலை மாலை என  இருவேளையும் பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரும்பு போல உடல் உறுதியடையும்.

பார்வை திறன் மேம்படும்

கொஞ்சம் வயதானாலே ஒரு சிலருக்கு பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் தலை தூக்கும். அவ்வாறானவர்கள் தான்றிக் காயை தினம் உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

வலி நிவாரணி

தான்றிக் காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயானது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தைலமாகவும், கை, கால் மூட்டு வலித் தைலமாகவும் பயன்படுகிறது.

பல வகை நோய்களை தீர்க்கும்

தான்றிக் காயின் சதைப் பகுதியானது மூல நோய், கை கால் வீக்கம், கண் நோய்கள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும். தான்றிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மற்றும் வறட்டு இருமல், மற்றும் அம்மை நோய் குணமாகும்.

புண்களை ஆற்றும்

தான்றிக்காய் பருப்பைத் தூள் செய்து அதனுடன் தண்ணீர் சேர்த்து புண், ரணங்கள் மேல் பூசி வந்தால் புண்கள் ஆறும். தான்றிக்காயை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இரைப்பைக்கு அது பலத்தைக் கொடுக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...
தனுசு ராசி குணநலன்கள்

தனுசு ராசி பொது பலன்கள் – தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசி குணங்கள் தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இதில் அடங்கியுள்ளன. இந்த ராசி...
லக்ஷ்மி குபேர பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் மகாலக்ஷ்மியின்...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #6

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும், அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கோள்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
சிக்கன் மஞ்சூரியன் ரெசிபி

சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி

சிக்கன் மஞ்சூரியன் அசைவ உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது சிக்கன். சிக்கன் ஆரோக்கியம் நிறைந்தது மட்டுமல்ல, மற்ற அசைவ உணவுகளை விட மலிவானது. சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிட அனைவரும் விரும்புவர். சிக்கனை பாரம்பரிய...
திரயோதசி திதி

திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை

திரயோதசி திதி திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை...
27 நட்சத்திரங்கள் பெயர்கள்

27 நட்சத்திரங்கள் பற்றிய விரிவான ஒரு பார்வை

27 நட்சத்திரங்கள் ஒரு பார்வை ஜோதிடத்தில் மிக முக்கியமானது நட்சத்திரங்கள் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய பிறந்த ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.