வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வம்

வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இம்மரம் 15 அடி முதல் 25 அடி வரை வளரும். இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். ஐந்து கூட்டிலைகளைக் கொண்ட மரத்தை மகாவில்வம் என்பர். ஆனால், மகா வில்வம் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.

வில்வ இலை பயன்கள்

வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். இதை அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள்.

வில்வப்பழங்கள் கோடைக்காலத்தில் பழுக்கும் தன்மை கொண்டது. இதன் தோல் பகுதி வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். வில்வம் காய் பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பானதாகவும் மாறிவிடும். கோடைக்கால துவக்கத்தின் போது மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். நாளடைவில் பச்சை நிறமாக மாறிவிடும்.

வில்வம் வேறு பெயர்கள்

வில்வமானது கூவிளம், சரபீதலம், அலுவீகம், அல்லூரம், ஆலூகம், சட்டாம், சிறிய பலகியம், திரிபத்ர, பில்வம், பூவிதாத, சலய, மாங்கல்ய, சாண்டல்லியம், கற்கடக நிலை மல்லிகம், குசாபி, வில்வை போன்ற பல பெயர்களால் அழைக்கபடுகிறது.

சித்த மருத்துவத்தில் வில்வம்

வில்வம் தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்றாகும். வில்வ மரத்தின் இலைகள், கொட்டைகள், பட்டை, பூக்கள் , பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை.

ஆன்மீகத்தில் வில்வம்

இந்து மதத்தில் வில்வ மரம் மிகப் புனிதமாக கருதபடுகிறது. சிவ வழிபாட்டில் வில்வ இலை கொண்டு செய்யப்படும் பூஜை விஷேஷமானது. மூன்று பகுதிகளை கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கருதபடுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது.

சிவனுக்கு ஒரு வில்வம் சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். மூன்று சாத்தினால் அவனின் அருள் பெறலாம், நான்கு வில்வ இலைகள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பது ஐதீகம். வில்வம் பக்தியையும், முக்தியையும் அளிக்கக்கூடியதாகும்.

வில்வ பூஜை

வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் நீங்கி கீழ்காணும் நன்மைகளையும் பெறலாம்.

1. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

2. கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

3. 108 சிவாலயங்களை தரிசித்த பலன்கள் கிடைக்கும்.

வில்வமரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நம் உடலில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். சிவனிற்கு பிரியமான வில்வ அர்ச்சனை மூலம் சிவனின் அருட்கடாச்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரக பயமில்லை.

வில்வத்தின் மருத்துவ பயன்கள்

மாரடைப்பை தடுக்கும்

வில்வப்பழம் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. வில்வப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வில்வப்பழம் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும்.

பலவித பிரச்சனைகளை தீர்க்கும்

வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருத்தாகும். வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். தாய்மார்களுக்கு தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும். சிறுநீரக கற்களைக் கரைக்கும். இதை ஊறுகாய் போல போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

உடல் உறுப்புக்கள் சக்தி பெறும்

உலரவைத்த வில்வப்பழம் ஒரு 5 கிராம் அளவுள்ள ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளும் சக்தி அடையும்.

பித்த நோய்களை குணமாக்கும்

வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. எல்லா விதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

கண்வலி தீரும்

வில்வத்தின் இளம் தளிர் இலைகளை லேசாக வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கக் கண்வலி, கண் சிவப்பு, அரிப்பு என அனைத்தும் குணமாகும்.

செரிமான திறன் அதிகரிக்கும்

வில்வ இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராகும். உணவில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் கலந்து உடல் வலுப்பெறும்.

மஞ்சள் காமாலையை குணமாக்கும்

வில்வ இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியும், கரிசலாங்கண்ணி இலைச்சாறு ஒரு தேக்கரண்டியும் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் விரைவில் குணமாகும்.

வில்வ பழத்தின் நன்மைகள்

உடல் அசதி குறையும்

வில்வ இலையைக் கைப்பிடி அளவு எடுத்து இரவு தண்ணீரில் ஊற வைத்து, தினசரி காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லியளவு ஊற வைத்த நீரை குடித்து வந்தால் கை, கால் வலிகள் கட்டுப்படும். அத்துடன் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீரை குடித்து வர காலப்போக்கில் புத்தி தெளியும்.

தோல் நோய்கள் ஏற்படாது

வில்வக் காயுடன், வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து, தேமல் மீது தடவி வந்தால் தேமல் மறைந்து சருமம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பும்.

குடல் வலுபெறும்

வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும். வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆண் கை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

ஆண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கை மச்ச பலன்கள் உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. ஒருவருக்கு மச்சம் இந்த இடத்தில் இருந்தால் இந்த மாதிரியான...
சில்லி சிக்கன் வீட்டில் செய்வது எப்படி

சில்லி சிக்கன் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி

சில்லி சிக்கன் அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனை வித விதமாக சாப்பிட அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போதைய நவீன உலகில் வித விதமான சிக்கன்...
banana halwa recipe

வாயில் வைத்த உடன் கரையும் வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா தேவையான பொருள்கள் வாழைப்பழம் – 3 பால் – 1 கப் சர்க்கரை – ½ கப் நெய் – ¼ கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு...
சரும வறட்சியை தடுக்க

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும் பருவ நிலை மாறும் போது நம் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் சரும வறட்சி. சரும வறட்சி  பெரும்பாலானோருக்கு குளிர் காலத்தில்தான் ஏற்படும். குளிர் காலத்தில்...
கும்ப ராசி குணநலன்கள்

கும்ப ராசி பொது பலன்கள் – கும்ப ராசி குணங்கள்

கும்ப ராசி குணங்கள் கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சதயம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2,...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.