கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள் இருந்தால் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்றும், வெள்ளை நிற பூக்களை வெள்ளை கரிசலாங்கண்ணி என்றும் அழைக்கபடுகிறது.

கரிசலாங்கண்ணி பயன்கள்

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என்றும், தேச‌சுத்தி மூலிகை எனவும் அழைக்கபடுகிறது. இது வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனவும் அழைக்கபடுகிறது. இது பல்வேறு அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட காய கல்ப மூலிகையாகும்.

கரிசலாங்கண்ணி கீரைகளின் ராணி என அழைக்படுகிறது. இது அனைத்து வகையான ஈரமான நிலங்களிலும் தானே வளரும் தன்மையுடையது. அத்துடன் நீர் வளம் நிறைந்த இடங்களில் அதிகம் வளர்கிறது.

கரிசலாங்கண்ணி வேறு பெயர்கள்

கரிக்கண்டு, கையாந்தகரை, கரிசனம், பொற்றலைக் கரிப்பான், கரிச்சான் பூண்டு, கையாள், பொற்கொடி, சாணாவு, சவுநாகம், கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல்வேறு பெயர்களில் கரிசலாங்கண்ணி அழைக்கபடுகிறது.

கரிசலாங்கண்ணியில் உள்ள சத்துக்கள்

கரிசலாங்கண்ணியில் நீர்சத்து, மாவுசத்து, புரதசத்து, கொழுப்புசத்து, கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

கரிசலாங்கண்ணியின் மருத்துவப் பயன்கள்

புண்களை விரைவில் ஆற்றும்

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமிநாசினியாகும். இது அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட இடங்களில் இதன் லையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டு போட்டாலும் புண்களை மிக விரைவில் புண்கள் ஆற்றிவிடும்.

கண்கள் பார்வை பிரகாசமாகும்

கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் அது கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர். இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும்.

தேவையற்ற ஊளை சதையை குறைக்கும்

உடலில் உள்ள தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, கீழாநெல்லி இலை சேர்த்து கஷாயம் போல செய்து குடித்து வரலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.

கண் பார்வை தெளிவடையும்

கரிசலாங்கண்ணி இலை குழந்தைகளுக்கு ஏற்படும் மந்த நோய்களைப் குணமாக்கும். கண்பார்வை தெளிவடையும். கண் நரம்பு படலங்களில் உள்ள கெட்ட நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும். கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் கரிசலாங்கண்ணி சாறு தான் அந்த நோயில் குணமாவதற்கு முதன்மையான மருந்து. மேலும் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது கரிசலாங்கண்ணி.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்தால் இரத்தத்தில் உள்ள நீர்மத்தன்மை குறையும். இதனால் இரத்தம் தண்ணீர் போல அல்லாமல் சிறிது கெட்டியாக பசைத் தன்மை அடைகிறது. இதனால் இரத்தம் இரத்த நாளங்களில் எளிதாக செல்லாமல் ஆங்காங்கு படிந்து இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் பழையபடி நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து குடித்து வரலாம்.

இளமையை தக்க வைக்கும்

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் உடலின் மினுமினுப்பு அதிகரிக்கும். கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் நரை, மூப்பு ஏற்படுவது தள்ளி போகும். மேலும் கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்ச்சியை போக்கி மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி அடைய செய்யும்.

காச நோயை தீர்க்கும்

ஆஸ்துமா, இருமல், ஈளை பாதிப்பு உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் காச நோய்கள் குணமாகும், மேலும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும் தீரும்.

இதயத்தை சீராக செயல்பட வைக்கும்

கரிசலாங்கண்ணி கீரை இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மேலும் மண்ணீரல், மற்றும் சிறுநீரகத்தைப் பலமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல் ஆகிய அனைத்திற்கும் கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.

கரிசலாங்கன்னி கீரை

மன நோயை தீர்க்கும்

ஆரம்ப நிலையில் உள்ள மனநோய்க்கு கரிசலாங்கண்ணி கீரை தான் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கருசிதைவை தடுக்கும்

அடிகடி கருசிதைவு பிரச்சனைக்கு உள்ளாகும் பெண்கள் கரிசலாங்கண்ணிச் சாற்றையும் பசும் பாலையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கும்.

மஞ்சள் காமாலையை குணமாக்கும்

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, கீழாநெல்லி இலை போன்றவற்றை சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 முதல் 10 நாட்களில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அனுஷம் நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி அனுஷம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : லக்ஷ்மி அனுஷம் நட்சத்திரத்தின் பரிகார...
வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும்

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்? தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி...
பாம்பு கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு மேற்கொள்வது

பாம்பு கடிக்கான முதலுதவி அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் நாம் காடுகளை அழித்து வீடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி வருகிறோம். காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் காட்டில் உள்ள விலங்குகள், பூச்சிகள்,...
ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி பொது பலன்கள் – ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி குணங்கள் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவர். ரிஷப ராசியில் கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்களும், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்களும் அடங்கியுள்ளன. ராசிகளில், ரிஷப ராசி...
இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.