நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை

மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள். அவற்றில் ஒன்றுதான் ஆடா தோடை இலை.

ஆடாதோடை இலை

இது ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடை என அழைக்கப்படுகிறது. இது சில இடங்களில் சிறு செடியாகவும், மற்றும் ஒரு சில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். இது எல்லா இடங்களில் காணப்படும் மூலிகை செடியாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.

ஆடாதோடை இலையின் வேறு பெயர்கள்

ஆடாதோடைக்கு ஆட்டுசம், வைத்தியமாதா, வாசாதி, வாசை தோடை, சிங்கம், நெடும்பா, ஆடாதோடை போன்ற வேறு பல பெயர்களும் உண்டு.

ஆடாதோடை இலையின் குணம்

இது வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும். சிறுநீரை பெருக்கும். கசரோகம் போக்கும். கபத்தை வெளியேற்றும். மூச்சுதிணறலை நீக்கும். ஆஸ்துமாவை குணமாக்கும். கண்வலி போக்கும். வாயு கோளாறுகளை நீக்கும்.

ஆடாதோடை இலையின் மருத்துவ பயன்கள்

நுரையீரலை சுத்தமாக்கும்

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தும் சிறந்த மருந்தாக ஆடாதோடை விளங்குகிறது. இது நுரையீரலில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.

சீதபேதி குணமாகும்

சீதபேதியினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஆடாதோடை இலைசாற்றுடன் தேன் கலந்து கொடுக்க சீதபேதி விரைவில் குணமாகும்.

உடல் வலியை போக்கும்

நெஞ்சில் சளி, அதனுடன் உடல்வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுத்தால் உடல்வலி பறந்தோடும். அதேபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலையுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னால் மார்பு வலி குணமாகும்.

ஆஸ்துமாவை குணமாக்கும்

நீண்ட நாட்களாக இருக்கும் சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்தாகும். இதன் இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவிட்டு, பின்பு வடிகட்டி தேன் சேர்த்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, இருமல், சுரம் போன்றவை குணமாகும்.

ஆடாதொடை இலையின் பயன்கள்

மேலும் இதனுடன் திப்பிலி, ஏலக்காய், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் கலந்து குடிநீரில் கலந்து கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் போன்றவை தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு, ஆஸ்துமா போன்றவை தீரும்.

கழிச்சலை குணமாக்கும்

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரில் போட்டு காய்ச்சி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி பிரச்சனையை தீர்க்கும்

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்றவை குணமாகும். ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடி போல செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அபிஜித் நட்சத்திர நேரம்

தொட்டதெல்லாம் துலங்கும் அபிஜித் நட்சத்திர நேரம்

அபிஜித் நட்சத்திரம் வெற்றி, முன்னேற்றம், செல்வம் இவற்றை அடைய சிறந்த நேரம் அபிஜித் நட்சத்திர நேரமாகும். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பழங்காலத்தில் முதல் நட்சத்திரம்...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
திருமண சடங்குகள்

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக?

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு திருமணத்திலும் அவரவர் குடும்ப வழக்கதிற்கு ஏற்ப சடங்குகள் வேறுபடும். குறிப்பாக இந்து மத திருமணத்தில் பல வகையான...
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
கும்ப ராசி குணநலன்கள்

கும்ப ராசி பொது பலன்கள் – கும்ப ராசி குணங்கள்

கும்ப ராசி குணங்கள் கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சதயம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.